ஆப்பமும்,அடிசாயாவும்…
29th May 2012 · 1 Comment
சின்ன சின்னதாய் நாம் அனுபவித்த சந்தோஷங்கள்,சில நேரங்களில் நம் இதயத்தில் நினைவுகளாக கூடி நம்மை கொள்ளையிட்டுபோனதுண்டு…
அப்படி ஒரு சந்தோஷம்தான் இந்த புகைப்படத்தை பார்க்கும் போதும் தோன்றுகிறது எனக்கு…
ஆம் அது…. ஆப்பமும்,அடிசாயாவும்
பெரும்பாலும் நமது ஊரில் மேல்ரோட்டில் உள்ள சாயா கடைகளில் கிடைத்தாலும் பாளையத்தன் கடையில் அப்பம்,சாயா சாப்பிடுவது அலாதிப்ரியம் தான்…
அப்போதெல்லாம் வெளிநாட்டு வாழ்க்கை அதிகம் பழக்கமில்லாத காலத்தில்,அதிகாலையில் வயலுக்கு வேலைக்கு போகும் போதும்,பாவுக்கான கூறு கட்டும் போதும்,தறி நெய்ய காக்குழியில் இறங்கும் முன்பு மேற்கே மெதுவாக சென்று ஆப்பமும்,உப்புமாவும் சாயாவும்
சாப்பிட்டுவிட்டுதான் வேலைக்கு செல்வார்கள்…
மண் அடுப்பில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆப்பச்சட்டியும்
அதில் வெண்மையாய் வார்க்கப்பட்ட ஆப்பமும் நடுவில் சீனியிட்டு அழகாக ஒன்றன் மீது ஒன்றாக கவிழ்த்து அடுக்கப்பட்டு வைத்திருப்பதும் அழகுதான்..,.
நோன்புநேரங்களில் சஹர் சாப்பாடு முடிந்து ஆப்பம் சாப்பிடும் வழக்கம் சிலருக்கு உண்டு,அதைப்போன்று பெருநாள் அதிகாலையில் தொழுதுவிட்டு மெதுவாய் நடந்து மேற்கே சென்று சாப்பிடுவதும் உண்டு…
இது ஒரு சாதாரணவிஷயம் தானே
இதைப்பற்றி இவ்வளவு பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றலாம்
சிறிய விஷயமாக இருந்தாலும் சிலவற்றிருக்காக மனம் ஏங்கத்தான்
செய்கின்றன…அதைப்போல் நாம் அனுபவித்த விஷயங்களை சற்று காலம் கடந்து அசைபோடுகையில் மனம் சுகப்படத்தான் செய்கின்றன….
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (1)
Comments are closed.




சிறிய விஷயமாக இருந்தாலும் சற்று காலம் கடந்து அசைபோடுகையில் மனம் சுகப்படத்தான் செய்கின்றன….