ஒசாமா உடலைத் தேடி ஒரு பயணம்: கிளம்பினார் அமெரிக்கர் பில் வாரன்
5th May 2012 · 0 Comments
ஒசாமாவின் உடலை கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் நிபுணரான வாரன், ஒசாமா பின் லாடன் கொலை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட சில புகைப்படங்களில் இருந்து ஒசாமாவின் உடலை எங்கு வீசியிருப்பார்கள் என தான் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து மேற்கே அரபிக்கடலில் 320 கி.மீ., தூரத்தில் ஒசாமாவின் உடல் அடங்கிய பை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வாரன், வரும் ஜூன் 1ம் தேதி முதல் இதற்கான பணியை தான் துவங்கவுள்ளதாகவும், இதற்கு ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படும் எனவும் கூறியுள்ளார். ஒசாமாவின் உடலை தேடும் பணிக்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை செலவிட உள்ளதாகவும் வாரன் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
By Nanban
Readers Comments (0)
Comments are closed.


