கடையநல்லூரில் அபாயக் கிணறுக்கு பாதுகாப்பு வேலி அமைத்த SDPI -யினர்!
24th June 2012 · 0 Comments
கடையநல்லூரில் பல ஆண்டுகளாக பயன்படாமல்,அபாயகரமாக இருந்து வந்த கிணறு கடையநல்லூர் SDPI -யினரின் உதவியால் வேலி அமைக்கப்பட்டது.
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 10 வது தெருவில் அமைந்துள்ளது இந்த கிணறு.ஒரு கலாத்தில் அந்த பகுதி மக்களால் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கிணறு பின்பு தண்ணீர் வற்றிய பிறகு யாராலும் சீண்டப்படாத கிணறாகவும் அந்த பகுதி மக்களால் குப்பைகள் மற்றும் கழிவு பகுதிகளை போடும் ஒரு குப்பை தொட்டியாக பயன் படுத்தி வரப்பட்டு வருகிறது.
பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் இந்த கிணற்றால் இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு ஆபத்துக்களே அதிகம்.இங்கு கொட்டப்படும் குப்பையிலிருந்து உருவாகும் கொசுக்கள் மூலமாக காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.மேலும் முதியோர்கள்,சிறு பிள்ளைகள் அந்த பகுதி வழியாக வரும் பொழுது தவறி விழும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதனை சுத்தப்படுத்தவேண்டும் அல்லது இதனை நிரப்ப வேண்டும் என்று யாரும் முவராத சூழ்நிலையில் கடையநல்லூரில் பல சமூக காரியங்களை செய்து வரும் அமைப்பான SDPI அமைப்பு இந்த கிணறை சுற்றி வேலிகள் அமைக்கும் பணியினை செய்து முடித்தனர்.
பல நாட்களாக மூடப்படாமல் அபாயகரமாக விளங்கி வந்த இந்த அபாய கிணற்றுக்கு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்ப்படுத்தி கொடுத்தமைக்கு அந்த பகுதி மக்களின் தங்களின் பாராட்டை தெருவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


