Filed Under:  நல்லூர்

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்!

13th May 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூர் நகராட்சி சார்பில் 13/05/2012 ஞாயிற்று கிழமை காலை சுமார் 9.00 முதல் மாலை 5.00 மணி வரையில் இலவச மருத்துவ முகாம் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த இலவச மருத்துவ முகாம் நெல்லை மாவட்ட கலெக்டர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில்,கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ,அமைச்சர் திரு.செந்தூர்பாண்டியன் அவர்கள் துவைக்கி வைக்க உள்ளார்.

இந்த இலவச முகாமின் சிறப்பம்சமாக காய்ச்சல்,இரத்த அணுக்கள் பரிசோதனை,நீரிழிவு நோய் பற்றிய பரிசோதனை,சித்த வைத்தியம்,கண் பரிசோதனை ,கொலஸ்ட்ரால் பரிசோதனை மற்றும் பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தபடுகின்றன .

அனைவரும் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை