Filed Under:  நல்லூர்

கடையநல்லூரில் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : அமைச்சர் தகவல்

22nd April 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூரில் பரவலாக காணப்பட்டு வரும் மர்ம காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையில் காய்ச்சல் குறித்து தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரான்மைதீன் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகளிடம் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காணப்படும் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், நகராட்சியில் சுகாதாரத்தை தீவிரமாக கண்காணிக்கவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியதாவது:
கடையநல்லூரில் பரவிவரும் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடையநல்லூர் நகராட்சியில் நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான மருந்து மாத்திரைகள் ஒதுக்கீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கூடுதலான வகையில் கடையநல்லூர் நகராட்சியில் அமைந்துள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மருந்துகள் வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் தொடர்பாக வீடு வீடாக சென்று சர்வே மேற்கொள்ளும் பணிகள் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நகராட்சியில் அதிகமாக காணப்படும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தவும் நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடையநல்லூரில் காணப்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார பணிகள் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அமைச்சர் தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Login

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை