Filed Under:  நல்லூர்

கடையநல்லூரில் நீண்ட நாட்களாக மூடப்படாத அபாய குழி!

21st April 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூர் அல்லிமூப்பன் கிழக்கு தெரு பெண்கள் தொழுகை பள்ளி அருகில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி நீண்ட நாட்கள் ஆகியும் மூடப்படவில்லை.

அல்லிமூப்பன் தெரு கிழக்கு பகுதிக்கு அருகாமையில் குடிநீர் டேங்க் அமைக்கும் பணி நடைபெறுவதை தொடர்ந்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தோண்டப்பட்ட இந்த குழிகள் அனைத்தும் வேலை முடிந்தவுடன் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில் அல்லிமூப்பன் கிழக்கு தெரு பெண்கள் தொழுகை பள்ளி மற்றும் அல்-இஹ்சான் மதரசா அருகில் தோண்டப்பட்ட குழி மட்டும் மூடப்படவில்லை.

இந்த பகுதியில் குழி தோண்டப்படும் பொழுது டெலிபோன் ஒயர்கள் சேதமடைந்துள்ளதால் டெலிபோன் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயம் அவர்கள் வந்து சரி பார்த்தபின் மூடலாம் என்று அப்படியே விட்டுவிட்டனர்.டெலிபோன் அலுவலகத்திலிருந்து வந்து பார்த்து விட்டு அவர்களும் எந்த தகவலும் கூறாமல் விட்டுவிடவே.

தோண்டப்பட்டு நீட நாட்களாகியும் இந்த குழி மூடப்படவில்லை.பெண்கள் தொகை பள்ளி,சிறுவர்கள் மதரசா இருப்பதனால் இந்த குழி மிகவும் அபாயகரமாக உள்ளது.கடையநல்லூரில் மின்தடை வேறு பயமுத்துவதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் இந்த பக்கமாக வருவதற்கு சிரமப்படுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த குழியை மூடுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பதை பார்க்கலாம்.

தகவல்:முகமது அலி,இத்ரீஸ்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை