Filed Under:  நல்லூர்

கடையநல்லூரில் 5 பேருக்கு டெங்கு அறிகுறி

11th June 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் காணப்பட்டு வருவதை தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா பல்லைக் கழகம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

இந்த முகாமிற்கு தலைமை வகித்த ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக டீன் டாக்டர் ஆனந்தன் கூறியதாவது:-நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி கண்டறியும் வகையில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலை கழகம் சார்பில் 3 நாட்கள் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆலங்குளத்தில் 1500 பேர் முகாமில் பயன்பெற்றனர். கடையநல்லூரில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சல் வருவதற்கான அறிகுறி தென்பட்ட உடனேயே அதற்கான சிகிச்சை முறையை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அதற்கான சிகிச்சை முறையாக மேற்கொள்ளும் போதிலும் உடலில் நீர்சத்து குறையாத வகையில் 3 லிட்டர் வரை சற்று உப்பு கலந்து ஜூஸ்களை குடிக்க வேண்டும். கடையநல்லூரை பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் 5 பேருக்கு இந்த முகாமில் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சைக்கு அந்த நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை