Filed Under:  நல்லூர்

கடையநல்லூரை ஆக்கிரமித்துள்ள குப்பை கழிவுகள்,உண்மையை உணர்த்தும் புகைப்பட ஆதாரங்கள் !

5th May 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூரில் கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சல் சிக்கன் குனியாவா, டெங்குவா அல்லது எந்தவகையிலான காய்ச்சல் என்ற மர்மத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. நகராட்சி பகுதியில் கடுமையாக காணப்படும் சுகாதார கேடு தான் காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் எனவும், அதிகளவில் காணப்படும் கொசுக்கள்தான் காய்ச்சலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் புனரமைப்பு திட்டத்திற்காக பதிக்கப்படும் குழாய்களுக்காக தோண்டப்படும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது நகராட்சி குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, சாக்கடைகள் சங்கமித்து வருவதாகவும், இதனால் காய்ச்சல் பரவுவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனிடையில் கடந்த வாரமாக காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்து உள் நோயாளிகளாக சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தவிதமான காய்ச்சல் ஏற்ப்படுவதற்க்கு கரணம் என்ன?

கடையநல்லூரில் ஆங்காங்கே கண்முன் தென்படும் அள்ளப்படாத குப்பைகள் ,மூடப்படாத கால்வாய்கள்,தூர்வாரப்படாத குளங்கள் என எங்கு பார்த்தாலும் துருநாற்றத்துடன் கொசுக்களின் ஆக்கிரமித்து காணப்படுவதே இந்த காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம்.

இதனை உண்மையாக்கும் விதமாக கடையநல்லூர்.org யின் குழு நகர் முழுவதும் பயணித்து எங்கெல்லாம் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன என்பதை புகைப்படத்துடன் கடையநல்லூர் மக்களுக்கு மட்டுமின்றி தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் குழுவின் முக்கிய நோக்கம்.

இதன் மூலம் மக்கள் சுகாதார விஷயத்தில் ஒரு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல்.உடனடியாக நகராட்சி நிர்வாகம் அள்ளப்டாத குப்பைகள் மற்றும் மூடப்படாத கால்வாய்களை மூட செய்து நகரை சுத்தபடுத்தி கடையநல்லூரை ஆக்கிரமித்துள்ள மர்ம காய்ச்சலை விரட்டியடித்து சுகாதாரமான கடையநல்லூரை உருவாக்க மக்களுடன் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகும்.

தாருஸ்ஸலாம் உயர்நிலைப்பள்ளி அருகில்


பரசுராம புறம் தெற்கு தெரு அருகில்


சந்தி பிள்ளையார் சிலை அருகில்(முப்புடாதி அம்மன் கோவில் தெரு)

மார்க்கெட் பின்புறம்.(போலீஸ் ஸ்டேசன் அருகில்)

 பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்

 அரசு மருத்துவமனை இடது புறம்(மலம்பேட்டை ரோடு)

டாக்டர் சஞ்சீவி கிளினிக் மேல்புறம்(மலம்பேட்டை ரோடு)

அரசு மருத்துவமனை இடது புறம்(மலம்பேட்டை ரோடு)

அரசு ஆடு அறுப்பு வளாகம் இடது புறம்

அரசு ஆடு அறுப்பு வளாகம் இடது புறம்


பேட்டை தர்ஹா அருகில்

பேட்டையில் இருந்து ரஹ்மானியாபுரம் தெரு செல்லும் வழி

ரஹ்மானியாபுரம் இரண்டாவது தெரு அருகில்

ரஹ்மானியாபுரம் ஐந்தாவது தெரு அருகில்

ரஹ்மானியாபுரம் பத்தாவது தெரு(அபாயக்கிணறு)

வடக்கு மலம்பேட்டை ரோடு

ஹீரோ ஹோண்டா ஷோ ரூம் எதிர் புறம்

மெயின் ரோட்டில் இருந்து ரஹ்மானியாபுரம் 4 வது தெருவுக்கு செல்லும் வழியில்

மெயின் ரோட்டில் இருந்து ரஹ்மானியாபுரம் 2 வது தெருவுக்கு செல்லும் வழியில்

மதினா நகர்



காயிதே மில்லத் திடல்

அய்யாபுரம் தெற்குத் தெருவில் இருந்து மார்கெட் செல்லும் வழி

கடையநல்லூர் மார்கெட்

தெப்பக்குளம் பகுதி

மசூது தைக்க பள்ளி அருகில்

அல்லிமூப்பன் தெரு பிலால் மஸ்ஜித் அருகில்

சாக்கடை கலந்த குடிநீர்

கடையநல்லூர்.org குழு

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Login

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை