கடையநல்லூர் கந்தூரி!
31st May 2012 · 0 Comments
நமது ஊர் கந்தூரி….
புதுச்சட்டை போட்டு
புட்டாசு வாங்கி தின்று
கொடிகட்டு பார்த்து
திரும்பிய நாட்களும்..
கந்தூரி கடைக்கு சென்று
கலர் கலராய் கண்ணாடி வாங்கி
ஒரு கையில் ஊச்சுகுடியும்
மறுகையில் ஊத்தாம்மட்டியும்
பிடித்து நல்லப்பாவோடு
பெரிய தெரு தாண்டி
வீடு வந்ததும்….
கந்தூரி துட்டை மாறி மாறி
கையால் எண்ணிப்பார்த்து
கடைசியாய் முடிவெடுத்து
தண்ணீர் துப்பாக்கி வாங்கியதும்…
புதியாய் கல்யாணமாகி
பெத்தாட்டுக்கு வந்திருக்கும் மாமி
மதினி மார்களுக்கு வளையல் எடுக்க
கந்தூரி கடைக்கு செல்கையில்
விளையாட்டு சாமான் என்னென்ன
வாங்கவேண்டும் என பேப்பரில்
எழுதிவைத்ததும்…
தங்கச்சிக்கு பேசிய வீட்டுக்கு
ஒடுகரை கொடுக்க
முறுக்கும் பணியாரமும் வாங்கி
முந்தியில் இருந்து பங்கு வைத்ததும்..
சந்தனக்கூடு பார்க்கவேண்டும் என
இரவு சீக்கரம் தூங்கி
அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து
காத்திருந்ததும்…
அண்டாவில் பொங்கும் பலாச்சோறு
ஊரெங்கும் மணக்க
உருஸ் பார்த்து வரும் போது
வரிசையில் நின்று வாங்கி வந்ததும்..
என எத்தனை நினைவுகள்
கந்தூரி கொண்டாட்டத்தில்…
கந்தூரி கொண்டாட்டம்
சரியோ!!! தவறோ!!!
கொண்டாடிய நினைவுகள்
சுகம்தான்…
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


