Filed Under:  அறிமுகம்

கடையநல்லூர் தமிழ்

10th December 2011   ·   8 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூர் வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் தமிழ் மற்ற ஊர்களிலிருந்தும் மிகவும் வித்தியாசப்படும். நமதூரில் அனைத்து சமுதாய மக்களும் சகோதர பாசத்துடன் ஒன்றோடோன்று இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகள் வித்தியாசப்படும்.
இவ்வளவு ஏன் முஸ்லிம்களிடையே தெருவில் வசிக்கும் மக்களும், பேட்டையில் வசிக்கும் மக்களும் பயன்படுத்தும் வார்த்தைகள் சில இடங்களில் வேறுபடும்.
ஆகவே நமதுரின் தனித்தன்மையான வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கவே இந்த சிறு முயற்சி.

இந்த பகுதியில் உங்களுக்கு தெரிந்த வட்டார வழக்கில் உள்ள தமிழ் சொல்லையும் அதற்கு ஈடான தமிழ்ச் சொல்லையும் தெரியப்படுத்துங்கள்.மற்ற அனைவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.நன்றி.

வாப்பா(தெரு), அத்தா(பேட்டை) – அப்பா, தந்தை
ம்மா, உம்மா – அம்மா
நல்லாப்பா, ராதா – தாத்தா(அப்பாவின் தந்தை)
நல்லம்மா, ராதி – பாட்டி (அப்பாவின் தாய்)
பெதாட்டு வாப்பா, நன்னா – தாத்தா(அம்மாவின் தந்தை)
பெதாட்டும்மா, நன்னி – பாட்டி(அம்மாவின் தாய்)
சின்னாப்பா – தந்தையின் இளைய சகோதரர்
சின்னம்மா, சின்னத்தா – சிறிய தந்தையின் மனைவி
பெரியாப்பா, பெருத்தா – தந்தையின் மூத்த சகோதரர், அம்மாவின் அக்கா கணவர்
பெரிம்மா – அம்மாவின் அக்கா
தாத்தா – அக்கா
மன்னி, மைனி – அண்ணனின் மனைவி
மாப்ள – தாயின் சகோதரனின் மகன், தந்தையின் சகோதரியின்
மச்சான் – தாயின் சகோதரனின் மகன், தந்தையின் சகோதரியின் மகன் மற்றும் கொழுந்தனார்
மாமி – தந்தையின் சகோதரி
பளையாசா – பள்ளிவாசல்,வணக்கத்தலம்
கைலி – லுங்கி
சோப்பு – சட்டைப்பை
மச்சி – வீட்டின் மாடிப்பகுதி
மேலோடு – வீட்டின் மேற்குப்பகுதியில் இருக்கும் பக்கத்து வீடு
கீழோடு – வீட்டின் கிழக்குப்பகுதியில் இருக்கும் பக்கத்து வீடு
ஆணம் – குழம்பு
தொவையல் – சட்னி
இன்னாங்கோ – ஒருவரை அழைப்பது
சால்னா – கறிக்குழம்பு
சாயா – தேநீர்
தாலா – நால்வர் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட உபயோகிக்கும் அகலமான பாத்திரம்
சேளா – மீதி

பெதாடு – அம்மாவின் வீடு.
பெரதோடம் – வீட்டின் பின் பகுதி.
நடூடு – வீட்டின் நடு பகுதி.
உளூடு – வீட்டின் முன் பகுதி.
எங்கூடு – என் வீடு.
அவ்வூடு – அவன் வீடு.
பெசவுக்கு – இலவசமாக.
கொஞ்சுகானம் – கொஞ்சம்.
ஒழுபேல – கொஞ்சம்.
புடுதல – கைத்தறி நூல் சுற்றும் சாதனம்.
காக்குளி – கைத்தறி வேலைசெய்யும் பகுதி.
ஒசக்க – மாடி பகுதி.
கர்வுளி – குழம்பு.

 

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (8)

  1. nallurmuzhakkam says:

    சிறப்பானதொரு முயற்சி. வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும் போது நானும் முயல்கிறேன்.

    தளத்தின் புதிய தளவ‌மைப்பு சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக உள்ளடக்கம் அனைத்திற்கும் முகப்பு பக்கத்தில் இணைப்பு இருப்பது நன்றாகவும், எளிமையாகவும் இருக்கிறது.

    நல்லூர் முழக்கம்

    • admin admin says:

      உங்களது வாழ்த்துக்கு நன்றி.தொடர்ந்து உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
      உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் தொடர்ந்து தெரியப்படுத்துங்கள்.
      உங்களது ஆக்கமும்,பங்களிப்பும் இருந்தால் இந்த தளம் மேலும் மெருகேறும்.
      நன்றி
      கடையநல்லூர்.org குழு

  2. nallurmuzhakkam says:

    “ஏல” என்று விளிப்பது நெல்லை மாவட்டத்தின் வழக்காக இருந்தாலும் கடையநல்லூரைப் பொருத்தவரை அச்சொல் தனிச்சிறப்பானதொரு அடையாளமாகும்.

    ஏல எனும் சொல் ‘எலுவ’ எனும் சொல்லின் மரூஉ வாகும். இச்சொல் பழந்தமிழர் இலக்கியங்களில் சில இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது. சில காலங்களுக்கு முன்புவரை யாழ்ப்பாணத் தமிழில் புழக்கத்தில் இருந்தது.

    அதேநேரம் எலுவ எனும் சொல்லின் மரூஉ வாக இருந்தாலும் இச்சொல்லின் பெண்பாலாக விளிக்கப்படும் “ஏளா” என்பதற்கும் எலுவ என்பதற்கு தொடர்பில்லை. ஏல என்பதன் திரிபாகவே ஏளா என்பது ஆகி நிற்கிறது.

    நல்லூர் முழக்கம்


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை