Filed Under:  நல்லூர்

கடையநல்லூர் நகராட்சியின் அலட்சியப்போக்கு!

11th May 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

கடையநல்லூரை நீண்ட நாட்களாக தாக்கி வரும் மர்மக் காய்ச்சல் நமதூரை விட்டு அகலாமல், மக்களை உடல் ரீதியாக தாக்கிக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இன்னொரு தாக்கமாக மின்தடை ……….தமிழ் நாடு முழுவதும் அமலில் உள்ள இந்த மின்தடை…ஒவ்வொரு நாளும் எதனை மணி நேரம் மின்தடை…

அறிவித்தும் அறிவிக்காமலும்,கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நமக்கு வெளிச்சம் இல்லாத அளவுக்கு மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது.தமிழகமும் கடுமையான மின் தட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த நிலைமையில்,கடையநல்லூர் நகர மின்சார வாரியம் மற்றும் கடையநல்லூர் நகராட்சியின் பொறுப்பற்ற செயல்களால் இன்று காலை 10 மணிக்கு மேலாகியும், தெரு விளக்குகள் அணைக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.அச்சம்பவத்தை இங்கே உள்ள படத்தில் காணலாம்.

இது போன்று சில இடங்களில் பகல் நேரங்களிலும், தெரு விளக்குகள் எரிவது,கடையநல்லூர் நகராட்சி மற்றும் கடையநல்லூர் மின்வாரியத்தின் நிர்வாகத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது?

சமீபத்தில் தான் kadayanalloor.org குழு நகர் முழுவதும் பயணித்து எங்கெல்லாம் குப்பைக் கழிவுகள் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது என்பதனை புகைப்படத்துடன் கடையநல்லூர் நகர பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்திற்கும் உணர்த்தியது.அதே போல இந்த அணைக்கப்படாமல் உள்ள தெரு விளக்குகளையும் படம் பிடிக்க இன்னொரு பயணம் மேற்கொண்டாகவேண்டும் போலிருக்கிறது.

“கவனிக்குமா இந்த நகராட்சி நிர்வாகம்! அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுமா!” பொறுத்திருந்து பார்ப்போம்!

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை