குவைத் வாழ் கடையநல்லூர் வாசிகளின் முதல் ஆலோசனை கூட்டம்
10th May 2012 · 0 Comments
குவைத் வாழ் கடையநல்லூர் உடன்பிறப்புகளை ஒன்றுசேர்த்து அவர்களை ஐக்கியமாக்கும் முயற்சியில் நமதூர் சகோதரர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த 04/05/2010 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு சுமார் 4 மணி அளவில் குவைத், ஃபர்வானிய்யாவில் அமைந்துள்ள கடையநல்லூர் வாசிகளின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏறக்குறைய அமைப்புக் குழு உறுப்பினர்கள் 12 சகோதரர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில நமதூர்வாசிகளின் பார்வைக்கு…
1. இன்ஷா அல்லாஹ் வரும் 18/05/2012 அன்று குவைத் சிட்டியில் அஸர் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் வாசிகள் அனைவரையும் ஒன்று திரட்டி நமதூருக்கான குவைத் அமைப்பை முறைப்படி ஆரம்பிப்பது.
2. ஆரம்பிக்கப்படும் அமைப்பிற்கு குவைத் கடையநல்லூர் முஸ்லிம் ஜமாஅத் (KKMJ) என்று பெயர் வைப்பது.
3. இவ்வமைப்பின் மூலமாக நமதூருக்கு தேவையான நலப்பணிகள் மற்றும் சமுதாய சேவைகளை கொள்கை அமைப்பு கட்சி வேறுபாடின்றி ஒன்றாக இணைந்து செய்வது.
4. நமதூருக்கான குவைத் அமைப்பு ஆரம்பிக்கப்டும் நிகழ்ச்சியின் தகவலை அனைவருக்கும் எடுத்துரைத்து குவைத் வாழ் நமதூர்வாசிகள் அனைவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பது.
5. கூட்டம் நடக்கும் இடம் சில நாட்களில் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
ஆலோசனைக் கூட்டம் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, துஆவுடன் முடிக்கப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கும், தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள…
குவைத் கடையல்லூர் முஸ்லிம் ஜமாஅத் (KKMJ) அமைப்புக் குழு,
1.u.a.abdul kader -97509266
2.m.s.abdul kuthous -99776520
3.s.m.hasan bukhari -65120393
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


