Filed Under:  முடவன் குட்டி பக்கம்

சாகுமோ எனது ஊர்-முடவன்குட்டி

11th December 2011   ·   19 Comments

பகிர்ந்து கொள்க

சட்டக்….. சட்டக்…. சட்டக் ……
தறி நெய்யும் உழைப்பின் இசை
காதில் விழவில்லை….

 

‘பாவு’ ஆத்தி நடந்து தளர்ந்த
வாப்பாமார் காலடிச்சுவடுகள்
கீழே அழுந்தி நெரிபடுவது அறியாமல்….
தெருக்களில்
வழுகி வழுகிப்
போகின்றன … ‘டாட்டா  சுமோக்கள்’ …

டிவி..கிரிக்கெட் ராட்சச ஒளிப் பாய்ச்சலில்
பார்வை தொலைத்த
கபடி… நீச்சல்… விளையாட்டுக்கள்
பழைய ஞாபாகங்களில்
தமது கண்கள் தேடி அலைகின்றன…

 

தறி இல்லை ..
உழைப்பில்லை…
உடலில் உறங்கிற்று சோம்பல் .
பசியை மறந்தது வயிறு ….. .
டாக்டரை ..மருந்துகளை..
தேடியலைகின்றனர்
எம்மக்கள் …

மனதில்
வந்தும் வராதும் மறையும்
மகன் முகத்தை
சவூதி ‘காசோலையில்’
உற்று உற்றுப் பார்த்துக்
உயிர் கலங்குவாள் அம்மா….

புடவை…. தங்கநகை …
புதுசு புதுசாய்
மதினி
போட்டுப்பார்த்தும்
உள்ளே நின்று கொல்லும்
வெளிநாடு போன
கணவன் நினைவு…

பெரிய அண்டாக்களில்- பிரியாணி:
தலைமுறைக்கும்
வாழ்வு தந்த
‘தறியும்’
‘ராட்டும்’
‘பாவு’ ‘மடி’ ‘சிட்டம்’ ‘சாம்பு’ ‘தார்’…. என
நொறுங்கல் நினைவுகளோடு
அடுப்பு விறகுகளாய்ப்
பற்றி எரிகின்றன …!
பெத்த புள்ளைக கரைசேர
காலமெலாம் தறிக்குழியில்
கெடந்து
அல்லற்பட்டு அழுத
‘வாப்பா’ ‘ம்மா’ கண்ணீர் மட்டும்
தீயில் போசுங்காது
நீண்ட அலறலாய்
ஓடும் …!

எங்கே…எனது ஊர் ….?

துக்கம்
நெஞ்சை அடைக்க
மெல்ல நடந்தேன் தெருவில்…

கண்கள் இடுங்கி
என்னை உற்றுப்பார்த்தவாறு
தள்ளாடியபடி ஏதிரே
ஒரு பெத்தம்மா
.
“…ஏலேய்…வாப்பா…
சொகமா இருக்கியா ராசா …?..”

அவள் குரலில்
அன்பின் உயிர்முளை துளிர்த்து
இலை விரித்து – கிளை பரப்பி
ஓங்கி உயர்ந்து பெருகும்:
வேர்கள் நீண்டு
வாப்பா ..பெத்தாப்பா ..பெத்தம்மா… .
வரளாத பூமியில்*
கால் கொள்ளும் :

சாகுமோ எனது ஊர் …?

……………..   ………………..    ………………

*வரளாத பூமி= அன்பும் பாசமும்
ஒருபோதும் வறண்டு போகாத
கடையநல்லூர்

கவிதை நிறைவுற்றது.
( இந்தக் கவிதை ஜுன் 2002 சமரசம்
இதழில் வெளிவந்தது.
இப்போது சில சொற்கள்
நீங்கி விட்டன: சில வரிகள்
சேர்ந்து கொண்டன: )

 

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (19)

  1. habeeb says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    கவிதை நன்றாக உள்ளது முழு கவிதை எப்பொழுது வரும் …..
    ஆவலுடன்
    ஹபீப் வர்ணமல்லி

  2. halid says:

    கவிதை அருமை.
    தறி, பாவு, மதி, ராட்டு இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு எவ்ளோ நாளாச்சு…!
    இன்னும் நம்ம ஊர்ல தறி நெசவுல்லாம் இருக்கா?
    கவிதை தொடர்ச்சி எப்போது வெளி வரும்?

    ஹாலித்,சென்னை.

  3. lukmanom says:

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    கவிதை நன்றாக உள்ளது .முழு கவிதை எப்பொழுது வரும் …ஆவலுடன் எதிர் நோக்கும்
    லுக்மான்., சென்னை

  4. mudavankutty says:

    அன்புள்ள ஜலில் வர்ணமல்லி,
    அஸ்ஸலாமு அலைக்கும்

    மிகப் பொருத்தமாக புகைப்படங்கள் இணைத்து, கவிதைக்கு புதுப் பரிமாணமே சேர்த்துவிட்டிர்கள். நன்றி .

  5. Mooppar Maapilai Rahumathullah says:

    வளராத பூமியில் அன்பும் பாசமும் ஒருபோதும் வறண்டு போகாத கடையநல்லூர் விரிந்து செழிக்கட்டும்.

    தி ரஹ்மத்துல்லாஹ்

  6. nallurnanban says:

    தலைமுறைக்கும்
    வாழ்வு தந்த
    ‘தறியும்’
    ‘ராட்டும்’
    ‘பாவு’ ‘மடி’ ‘சிட்டம்’ ‘சாம்பு’ ‘தார்’…. என
    நொறுங்கல் நினைவுகளோடு
    அடுப்பு விரகுகளாய்ப்
    பற்றி எரிகின்றன …!

    படிக்கும் பொழுது அழுகை வருகின்றது…

  7. rabbani rabbani says:

    அஸ்ஸலாமு அலைக்கும்
    தலைமுறைக்கும்
    வாழ்வு தந்த
    ‘தறியும்’
    ‘ராட்டும்’
    ‘பாவு’ ‘மடி’ ‘சிட்டம்’ ‘சாம்பு’ ‘தார்’…. இன்று இல்லாமல் போனதிற்கான காரணம் என்ன?
    என்று சிந்தித்தால் உழைப்பிற்கு ஏற்ற வூதியமின்மைவும் தரஹு காரர்களின் adavadithanathaalum

  8. Mohideen Mohideen says:

    கவிதை நன்றாக உள்ளது
    Photo migavum arumai.
    thanks

  9. masoodmb says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா .
    சவுரியமா இருக்கியளா? தங்களின் வார்த்தைகளுக்காகவே நமதூர் வாழும்.

  10. vtkader says:

    வந்தும் வராதும் மறையும்
    மகன் முகத்தை
    சவூதி ‘காசோலையில்’
    உற்று உற்றுப் பார்த்துக்
    உயிர் கலங்குவாள் அம்மா….

    தலைமுறைக்கும்
    வாழ்வு தந்த
    ‘தறியும்’
    ‘ராட்டும்’
    ‘பாவு’ ‘மடி’ ‘சிட்டம்’ ‘சாம்பு’ ‘தார்’…. என
    நொறுங்கல் நினைவுகளோடு
    அடுப்பு விரகுகளாய்ப்
    பற்றி எரிகின்றன …!
    பெத்த புள்ளைக கரைசேர
    காலமெலாம் தறிக்குழியில்
    கெடந்து
    அல்லற்பட்டு அழுத
    ‘வாப்பா’ ‘ம்மா’ கண்ணீர் மட்டும்
    தீயில் போசுங்காது
    நீண்ட அலறலாய்
    ஓடும் …!

    கவிதை நன்றாக உள்ளது

  11. SMAHAMED says:

    அஸ்ஸலாமு அலைக்கும்
    தலைமுறைக்கும்
    வாழ்வு தந்த
    ‘தறியும்’
    ‘ராட்டும்’
    ‘பாவு’ ‘மடி’ ‘சிட்டம்’ ‘சாம்பு’ ‘தார்’…. என
    நொறுங்கல் நினைவுகளோடு
    அடுப்பு விரகுகளாய்ப்
    பற்றி எரிகின்றன …!
    கவிதை நன்றாக உள்ளது


Comments are closed.

Login

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை