சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தடை நீட்டிப்பு :உச்ச நீதிமன்றம்
14th June 2012 · 0 Comments
பொதுப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் 4.5% சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஓபிசி பிரிவில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க அனுமதிக்க முடியாது என்றும், இது குறித்து ஆந்திர உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
மேலும், சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடை விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
By Nanban
Readers Comments (0)
Comments are closed.


