Filed Under:  அஞ்சல் செய்யாத கடிதம்

சொல்ல மறந்த சேதி

8th June 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

அஞ்சல் செய்யாத கடிதம் – 9

சொல்ல மறந்த சேதி

தோஸ்த்!

நம்பவே முடியல… நீ… நீயா?

இன்னிக்கு பத்திரிகை படிச்சிட்டு ரொம்ப அதிர்ந்து போயிருக்கேன்.

என்னை உனக்கு ஞாபகமில்லாமப் போகலாம்.பத்து,பன்னிரெண்டு வருசமானாலும் உன்முகம்
எனக்கு மறக்கல.

வழிய,வழிய எண்ணெய் தேய்ச்சு, நேர்வகிடெடுத்து,சுரிப்புச் சுரிப்பா யூனிஃபார்ம் வெள்ளைச்
சட்டையும்,கட்டைப்பேண்டுமா…வளைஞ்சு போன ஹீரோப் பேனாவுமா உன்னோட உருவம்
இப்ப கூட எம்முன்னாடி நிழலாடுது.

நம்மோட படிச்சவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா போயிட்டாங்க.மீசையும் தாடியுமா
சிலபேர அடையாளமே பார்க்க முடியல…!

‘நான் டாக்டருக்குத்தான் படிப்பேன்னு ஓயாமச் சொல்வானே உன்னோட கடேசி பெஞ்ச் கூட்டாளி
அவன் சென்னையிலதான் இருக்கான்.ஆனா டாக்டரா இல்ல….பெரிய்ய்ய்ய பத்திரிகையாளனா…
ரொம்ப சந்தோசமாயிருந்துச்சு.

நம்ம சிவா இல்ல… அவன் அமெரிக்காவுல இருக்கான். சையதுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.
பிசினஸ் பண்றானாம்.ஜபருல்லா குரூப் சவூதியும் துபாயுமா இருக்காங்க.

ரஃபீக் கேமரா மேனாயிட்டான். உதுமான்தாம்பா ரொம்ப வருத்தமான விசயம்.குளத்துல விழுந்து
இறந்துபோனான்.ஆனா அதைவிடப் பெரிய வருத்தம் உன்னோட போட்டாவ இன்னிக்கு பேப்பர்ல
பார்த்தது.

இது பொய்ச்செய்தியா இருக்கணும்னுதான் ஆசைப்படுறேன். ஒருவேளை இந்தச் செய்து உண்மையா
இருந்தா…

நீ திருடனா…? பிடிபட்ட பொருட்களுடன் சட்டையைக் கழட்டி கைகட்டி நிற்கும் ரவுடியா நீ…?
எப்படிடா…எப்படி?

வாராவாரம் வகுப்பறையை பெருக்குவோம்.உன்னோட வாரத்துல நீ பெருக்கும்போது எழுதாத
என்னோட ரீபிளைப் பத்திரப்படுத்தி ‘அடுத்தவங்க பொருளுக்கு நாம ஏன் ஆசைப்படணும்’மு
தத்துவம் பேசின உன்னாலயா இப்படியெல்லாம்….

நானும் இதுக்கு காரணமாயிட்டேண்டா..

படிக்கிற வயசுல சினிமா,கத,அரசியல்,விளையாட்டுனு எதெல்லாமோ பேசியிருக்கேன்.
ஒழுக்கத்தையும் நேர்மையையும் பேச மறந்துட்டோம் இல்லையா..?

கதைப் புத்தகம் தந்தேன். நாம வேற வேற மதமா இருந்தாலும்…ஆன்மிக நூல்களையும் உனக்கு
தந்திருக்கணும்.

உலக மக்களுக்கெல்லாம் சொந்தமான ஆன்மிக வழிகாட்டுதலை உனக்கு தந்திருக்கணும்.
உலக அமைதிக்கான இந்த உன்னதச் செய்திகளை உனக்குச் சொல்லித் தந்திருக்கணும்.

எட்டு வருசமா ஒன்னாவே படிச்சோம்.

சாப்பாடு கூட ஒன்னாவே சாப்பிட்டோம்.

நான் வந்த நல்லவழிக்கு உன்னையும் அழைக்க மறந்துட்டேனே……

இந்த உலகத்திலேயும், மறு உலகத்திலேயும் உண்மையான வெற்றிக்குரிய ஒரே வழியை
சொல்லமறந்துட்டேனே……

தோஸ்த்..!

உன்னோட விரல்கள் என்னை நோக்கி நீளும் தீர்ப்பு நாளில் நான் என்னசெய்வேன்?

கவலைதோய்ந்த நினைவுகளுடன்
தோஸ்த்

(சமரசம் 01-15 மே 2003)

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Login

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை