தொலைந்து போன கடையநல்லூரின் பொழுதுபோக்கு அடையாளங்கள்!-செங்கோட்டையன்
12th November 2012 · 1 Comment
கபடி.. கபடி என்று
கைகொருத்தாடிய
தெருக்களெல்லாம்
கபளிகரமாக கையாடப்பட்ட
வேதனையை என்சொல்வேன்..
பள்ளியிலும் மதரஸாவிலும்
பாசத்தோடு
பாடங்களைபடித்து விட்டு
பாங்கான நண்பர்களை
பகுதியாய் பிரித்துக்கொண்டு
அடுப்புச்சாம்பலால்
ஐந்து கோடுகளாய்
அடையாளமிடப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரை நிர்வாணமாய்
கோமளத்தை
…… தெரிய மடித்துக்கொண்டு
குஸ்த்தி பொடுவதுபோல்
குனிந்தபடி குதித்தாடிய
தெருக்களெல்லாம்
படிகளாலும் படுகுழிகளாலும்
பயணிக்;க முடியாமல்
பழுதடைந்து போகும்
வேதனையை என்சொல்வேன்..
அவரவர் கட்டும் வீடுகளால்
அரைத்தெருவை
அபகரித்துக்கொண்டு
அடுத்தவரை
அல்லல்பட வைப்பதில்
அவர்களுக்கென்ன ஆனந்தம்
இரண்டு ஆட்டோவரக்கூட
இடமில்லாது இடத்தை
இடைமரித்துக் கொண்டதை
இல்லை..
இறந்தபின்
இறுதி ஊர்வலத்திற்கு
இட்டுச்செல்லும் சந்தூக்கை
சரியாய் வைக்ககூட
வகையில்லாமல் போன
வேதனையை என்சொல்வேன்..
தெருவுக்கு நாலு பாவிட்டு
பசைகுடித்தத் தெருவெல்லாம்
பாவாத்தும்
பாதங்களால் அல்லவா
பதிந்ததும் விரிந்ததும்
கோலியாடவும்
செல்லாங் குச்சியாடவும்
கொடிகட்டக் களை(கம்பு)நடவும்
குழிதோண்டும்போதெல்லாம்
குச்சிபிடித்த கையல்லவா
கோரை(காய)ப்பட்டது
கண்ணாம்பூச்சியாடவந்து
சாட் பூட் த்திரி சொல்லி
சாட்பாலாடினாலும்
அவ்வாபெந்தாடினாலும்
இருட்டிலே ஓடினாலும்
இடறிடாமல்
விரிந்திருந்ததேனன்று
வெளிச்சம் வந்த பின்னும்
விரைகின்ற எங்களை
கீழே விழத்தாட்டும்
வேதனையை என்சொல்வேன்..
நீளுகின்ற பாதையெல்லாம்
ஊர்தோறும் விரிகின்றபோது
நீண்டு நின்ற நீயெல்லாம்
நெருங்கியதால்
கபடியாட காளையர்
காணாமல் போன
வேதனையை என்சொல்வேன்..
-செங்கோட்டையன்
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (1)
Comments are closed.



பூயல்ல்கு பயந்துஒட மனிதன் கபடி கல்லாய் போனான் ?? க்ஹகுல்ல்யி வேண்ட்டும் தாறு உண்ட்டும் நன்மை உண்டும்