பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு
29th April 2012 · 0 Comments
ஏப்ரல் 2012-ல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவை இணையதளம் மூலம் பள்ளிகளிலேயே பதிவு செய்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.
எனவே அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெயர், தந்தை பெயர், சாதி, முகவரி, தாலுகா, வருவாய் மாவட்டம், குடும்ப அட்டை எண், சாதி சான்று எண், சாதி சான்று வழங்கிய அதிகாரி, நகரம் அல்லது ஊரகம் குறித்த விவரங்களை சேகரித்து இணையதளத்தில் 4.5.2012-க்குள் பதிவு செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை மாணவர்களிடம் பெற வேண்டும். எந்த மாணவரின் பெயரும் விடப்படக்கூடாது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புடைய செய்திகள்
By Nanban
Readers Comments (0)
Comments are closed.


