Filed Under:  தமிழ் நாடு

பள்ளிவாசலை புனரமைக்க ரூ.30 கோடி: அமைச்சர் தகவல்!

11th June 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களை புனரமைக்க நடப்பாண்டில் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது :கடந்தாண்டு பள்ளிவாசல்கள் புனரமைப்பதற்கு முதல்வர் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு கடந்தாண்டு 28 விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்தாண்டு மேலும் 26 விடுதிகள் புதிதாக கட்டப்படவுள்ளன. கடந்தாண்டு சிறுபான்மையினருக்கு மூன்று விடுதிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல், இந்தாண்டும் ஒதுக்கப்படும். கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு நினைவிடம் உள்ளது. நினைவு மண்டபம் கட்ட, முதல்வரிடம் வலியுறுத்துவேன், என்றார்.

-தினமலர்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை