கடையநல்லூர் பொது மக்கள் கவனத்திற்கு!
7th June 2012 · 0 Comments
அரசு மக்களுக்காக ஏற்படுத்தியுள்ள பல நலத்திட்டங்களில் ஒன்றுதான் நுகர் பொருள் வாணிபக் கழகம்.அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்வதற்காகவே பல்வேறு நியாய விலைக் கடைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயல்பட்டுகொண்டிருக்கிறது.இதனால் நாள் தோறும் பொதுமக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் ஆங்காங்கே அவ்வப்போது சில அநியாயங்கள் இந்த நியாய விலைக் கடைகளில் இன்றும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.உதாரணமாக ரேஷன் கடைகளில் சில இடைத்தரகர்களின் தலையீட்டால் ஏழை எளிய மக்கள் கூட மிகவும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.கடந்த சில தினங்களுக்கு முன்னால் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்தது.நெல்லை மாவட்டதிதிலும் அதிலும் குறிப்பாக நமது கடையநல்லூரிலும் மும்முரமாக நடந்தது.இதில் பாதிக்கப் பட்டவர்களில் அநேக மக்கள் அசலான குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள்தான்.இதற்கு காரணம் இந்த இடைத் தரகர்கள்தான்.இதனை நாம் ஒவ்வொரு முறையும் அறிவிப்பதற்கு காரணம், இன்னும் அந்த இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அரசு அதிகாரிகள் அனைவருமே பொதுமக்களுக்காக வேலை செய்ய நியமிக்கப் பட்டவர்கள் என்பதை பொதுமக்களும் குறிப்பாக அரசு அதிகாரிகளும் மறந்து விடக்கூடாது.அவர்கள் விருப்பம் போல நடந்து கொள்வதற்கு இது ஒன்றும் அவர்களின் சொந்த கடை இல்லை.அப்படி நினைத்துக்கொண்டு விருப்பம் போல கடைக்கு வருவதும் ,விருப்பம்போல் போவதுமாக இன்றளவும் நடந்து கொண்டுதான் உள்ளது.இதனைப் போது மக்களும் கண்டும் காணாமல் விட்டுவிடுவதுதான் வேதை தரும் விஷயமாக உள்ளது.அவர்களுக்கு இது மாதிரியான விஷயங்கள் பழகிப் போய் விட்டதனாலோ என்னவோ அவர்கள் கண்டு கொள்ளவில்லை.இதனை சாதகமாகப் பயன்படுத்தி சில அரசு அதிகாரிகள் இன்று மட்டுமல்ல பல வேலை நாட்களில் காலை தாமதமாக பணிக்கு வருவதும், மாலை சீக்கிரமே பணி முடித்துக் கொள்வதும் நடந்த வண்ணம் தான் உள்ளது.
நியாய விலைக் கடைகள் அனைத்துமே காலை 9.00 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.அதுபோல் மாலை 5.00 மணிக்கு பணியை முடிக்க வேண்டும் என்பது அரசு உத்தரவாகும். அரசு விடுமுறை நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் குறித்த நேரத்தில் பணிபுரிய வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும்.அது போல அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப் பட வேண்டிய அனைத்து பொருட்களையும் தினமும் காலை முதல் மாலை வரை வேலை நேரங்களில் வழங்கப்பட வேண்டும் இதுவும் அரசு ஆணையாகும்.இது மாதிரி இல்லாமல் கடை தாமதமாக திறக்கப் பட்டாலோ அல்லது பொருட்களை வாங்குவதற்கு அலைக்களிக்கபோட்டலோ மக்கள் யாரும் அச்சப் படத் தேவையில்லை.பல அடிப்படை விஷயங்களுக்காகப் போராட்டம் நடத்தும் மக்கள், இது போன்ற விசயங்களுக்காக போராட்டம் நடத்துவதில் எந்த விதப் பிழையும் இல்லை.எனவே மக்கள் இந்த குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கூறலாம்,அவர்களிடம் தக்க பதில் இல்லையெனில் தங்களது வார்டு கவுன்சிலர் மூலமாக உயர் அதிகாரிகளிடம் முறையிட வேண்டும்.இது போல அச்சமில்லாமல் போது மக்கள் நடந்தாலே பெரும் பாலான தவறுகள் குறைந்து விடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
-நல்லூர் நண்பன்.
தொடர்புடைய செய்திகள்
By நல்லூரான்
Readers Comments (0)
Comments are closed.


