Filed Under:  நல்லூர்

கடையநல்லூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி பொதுமக்கள் மக்கள் புகார்

19th June 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக மேலக்கடையநல்லூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மேலக்கடையநல்லூர் மாரியப்பன் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:ரியல் எஸ்டேட் முகவர்களாக பணியாற்றி வரும் நாங்கள் தவணை முறையில் ஒரு நிறுவனத்தின் வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பொதுமக்களிடம் பண வசூல் செய்து கொடுத்து வந்தோம். முதலில் பணம் செலுத்தும் போது ஓரிடத்தை காட்டிவிட்டு தவணை முடிவில் வேறு இடத்தை ஒதுக்கீடு செய்வதாக கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர்.இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் பல காற்றாலைகளும் உள்ளன. 10 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பொதுமக்களிடம் தொடர்ந்து மோசடி செய்து வருகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :தினமலர்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை