Filed Under:  படைப்புகள்

வெளிநாட்டு மோகம் வந்து கூடிவாழ்ந்த நம்மையெல்லாம் எப்படி துண்டாடி விட்டது!- செங்கோட்டையன்

7th May 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

பிரிந்தவர் கூடினால்..

“அஸ்ஸலாமு அலைக்கும் ஹமீது பாய் எப்படியிருக்கிறீர்கள். வெகு காலமாகி விட்டது நாம் இருவரும் இப்படி கால் நடையாக நடந்து வந்து அட்டகுளத்து கம்மாயில் காலார உட்கார்ந்து உலகத்தைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நம் வீட்டைப்பற்றியும் பேசி முப்பது வருட காலங்கள் கடந்து போயிருக்கும் என்று நினைக்கிறேன் சரியா?”

“வ அலைக்கும் ஸலாம் காதர்பாய் சரியாக சொன்னீர்கள் ஏனென்றால் நான் ஆயிரத்தி தொழாயிரத்தி எம்பத்திரெண்டில் ஜுன் மாதம் இருபத்திஇரண்டாம் தேதி அப்போதைய பாம்பேயிலிருந்து சவுதியாவுக்கு புறப்பட்டேன். அங்கே ஒரு ஆறு வருடங்கள் இருந்து முடித்து விட்டு ஊருக்கு வந்தேன், இனி வெளி நாடுகளுக்கு சென்று யாரிடமும் கைகட்டி நிர்க்காமல் சொந்தக்காலில் நிர்க்க வேண்டுமென்று எண்ணி ரொட்டிக்கடை வியாபாரத்தை ஆரம்பித்தேன்.

ஒரு வருடம்தான் ஓடியது, பிறகு சிங்கப்பூர் படையெடுத்தேன் அங்கே ஒருஆறு வருடங்கள் கழிந்தது. திரும்ப ஊருக்கு வந்தேன், ஆறுமாத காலம்கூட என்னால் ஊரில் தாக்குப்பிடிக்க முடியவில்லை! எடுத்துண்ட கலப்பை இருந்துண்ட ஆகாது என்பதுபோல் துபாயிக்கு ஓடினேன், அங்கே ஒரு பதினாறு வருஷம், இப்படி நாடு நாடாய் ஓடி, ஓடாய் போனதுதான் மிச்சம் யாரை யாரிடம் சொல்லி நொகுவது பையன்களை படிக்க வைச்சோம் புள்ளைகளை கட்டிக்கொடுத்தோம் எங்க கடமையெல்லாம் முடிஞ்சுட்டதுனு நினைக்கிறோம் இனி எங்க கதையை அந்த அல்லாதான் முடிச்சு வைக்கனும்”

“அல்லாதான் எல்லாருடைய கதையை ஆரம்பிப்பதும் முடித்து வைப்பதும். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்கள் உங்களுக்கு இலேசாகவும் மனம் நிறைவாக இருக்கவும் கிருபை செய்வானாக.., ஹமீதுபாய் இப்போ நாம இருவரும் ஒருவரையொருவர் மனம் விட்டு பேசத்தானே இங்கே வந்துள்ளோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா பழைய சினிமா ஒன்று ‘பந்தையம்’ என்றொரு படம் உண்டு அதில் ஜெமினிகணேசனும் ஏவியெம் ராஜனும் நடித்திருந்தார்கள் இருவரும் நண்பர்கள் ஐந்து வருடத்திற்கு பின்னால் சந்திப்பதாய் சத்தியம் செய்துவிட்டு பிரிந்து விட்டு ஐந்து வருடம் கழித்து சந்திப்பார்கள் ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொருவர் திருடனாகவும் சந்திப்பார்கள் அது ஒரு பழைய கதை என்றாலும் அதே மாதிரி நம்ம ஊரில் அந்த தறிநெய்த காலத்தில் ஒன்றாய் பழகிய நண்பர்கள் பலர் கோடீஸ்வர்ராகவும் இன்னும் சிலர் முன்புபோல் ஏழையாகவே காண முடிகிறது. நம்மைப்போல் பலர் பல பத்தாண்டுகளாகியும் இன்னும் சந்திக்காமல் இருக்கத்தான் செய்கிறார்கள் அதிலும் குறிப்பாக என் கூடப்பிறந்த தம்பி ஒருவனை பத்தொன்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் நேரில் பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் நம் ஊரில் வெளிநாட்டு மோகம் வந்து கூடிவாழ்ந்த நம்மையெல்லாம் எப்படி துண்டாடி விட்டதென்று. அதுமாதிரி நாம் இருவரும் ஊருக்கு லீவில் வந்து போயிருந்தாலும் இதுவரை ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் போயி இப்போ வெளி நாட்டு வாழ்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பின்னால் சந்திக்கும் வாய்ப்பை தந்த அந்த அல்லாஹ்வுக்கே அணைத்துப்புகழும் சரிதானே ஹமீதுபாய்”

“ஆமாம் காதர்பாய் நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள் நானும் உங்களை தற்போது ஊரிலே பார்க்கும் போதெல்லாம் பழைய காலங்கள் மாதிரி இங்கே வந்து கொஞ்ச நேரம் மனம் விட்டு பேசிச்செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால், அஸருக்கும் மக்ரிபுக்கும் இடையிலுள்ள நேரம்தான் நாம் சந்தித்துப்பேச சரியென்று நினைத்தாலும்கூட அடிக்கிற வெயிலின் தாக்கம் குறையும்முன்னே மக்ரிபுக்கு பாங்கு சொல்லி விடுகிறார்கள். அதனால் நாம் ஊர் வந்து பல மாதங்களாகியும் குடும்பத்தில் பாகப்பிரிவினையால் ஒரே வட்டாரத்தில் எதிரும் புதிருமாய் இருந்த நாம் இப்போது இக்பால் நகரிலும் மக்கா நகரிலும் துண்டாடப்பட்டு போனதால் பழைய மாதிரி தினசரி இங்கு வந்து போகக்கூடிய சூழ்நிலை வாய்ப்பதில்லை, அதுமட்டுமில்லாமல் முன்பெல்லாம் தொழுகைகளைப்பற்றி எந்த எண்ணமுமில்லை அதனால் ஐஞ்சு மணிலிருந்து எட்டுமணிவரை ஊரைப்பற்றி பணா அளந்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போதுள்ள கடேசி காலத்தில் முடிந்தளவு நண்மைகளை சம்பாதித்து கொள்ளவே மனம் நாடுவதால் எங்கேயும் போக மனம் விரும்பவில்லை. இருந்தாலும் பிறந்ததிலிருந்து ஒன்றாய் சேர்ந்து வளர்ந்த நாம் முப்பது வருட பிரிவுகளை ஒரு முப்பது நிமிடங்களிலாவது மனம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் உள்ளக்கிடங்கினை பகிர்ந்து கொள்வதால் மனம் ஒரு நிறைவானதாக இருக்குமே என்றுதான் சுள்ளென்று அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உங்களோடு அளவாட ஓடிவந்தேன் சொல்லுங்க காதர்பாய்”

“தறி நெய்தால்தான் சாப்பாடு என்ற நிலை நம் ஊரில் இருந்தபோது நூலுக்கு பஞ்சு கிடைக்காமல பாவுக்கு நூல் கிடைக்காமல்; நெய்யப்பட்ட சரக்குகளுக்கு தரவன் வீட்டில் கூலி கிடைக்காமல் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிற கால கட்டத்தில். இந்த தறிதொழிலை விட்டு நமக்கெல்லாம் வேறு தொழில் கிடைக்காதா? என்று ஏங்கி நின்ற காலங்கள் பல, செய்யும் தொழிலை சீர்தூக்கி பார்க்கும்கால் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை என்ற வள்ளுவமொழியை சொல்லியே நம்மையெல்லாம் குன்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்துவிட்டார்கள் இல்லையானால் அக்கம் பக்கத்திலுள்ள நம்மவர்கள் அக்கம் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று ஒரு நிதந்தரமான வியாபாரிகளாக இருப்பதுபோல் நாமம் அதுபோல் சென்றாவது ஒரு வியாபாரத்தில் விளைந்திருக்க முடிந்திருக்கும் அப்படியும் அந்த நேரத்தில் முடியாமல் காக்குழியே கதியாக இருந்து விட்டோம். கிராமத்திலுள்ள ஏழைபாளைகள்கூட தினசரிக்கூலியென்று வயல்காட்டு வேலைக்கும் வேறு வேலைகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்த நிலையில் கௌரவம் காக்கப்பட்ட நிலையில் நாம் பாதிவயிர் கஞ்சி குடித்தும் குடிக்காமலும் பாவாடையை வேட்டியையும் இடுப்பில் இருக்க கட்டிக்கொண்டு வாழ்ந்த நம் இனப்பெண்களும் ஆண்களும் குறிப்பாக இளஞர்களையும் தன்னகத்தே கொண்ட நமது ஊர், இன்று இத்தனை இன்னல்களுக்கும் இழிவான இன்னிலைக்கும் இலக்காக காரணமென்ன என்பதை நீங்கள் இதுவரை யோசித்ததுண்டா ஹமீதுபாய்?”

“ஏனில்லை காதர்பாய், யோசித்ததுண்டு ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அப்படித்தான் ஆகிவிட்டது நமது ஊர். மேலக்கட்சி, கீழக்கட்சி, தங்கள்கட்சி, கோட்டாத்துகட்சி என்று அரசியல் அல்லாத கட்சிகளாய் ஆங்காங்கே இருந்தாலும், ஊர் ஒன்றுபட்டிருந்ததால் குற்றம் செய்ய பயந்தார்கள். ஊர் பஞ்சாயத்தார் என்கிறபோது ஊரிலுள்ள அனைவரும் ஒன்றுபட்டேயிருந்தார்கள். பேரூர் கூடுகிறது என்றால், குற்றவாளியாக கருதப்பட்டவர்களும், நிரபராதியென்று தன்னை நினைத்துக்கொண்டவர்களும், என்ன தீர்ப்பு வழங்கப்போகிறார்களோ? என்று பயந்தவர்களாய் இருந்தார்கள். குற்றம் செய்த வீட்டாரை எதிர்த்து நிர்ப்பதில் அந்த குடும்பத்தை சார்ந்தவர்களும் பொதுமக்களோடு ஒன்று திரண்டு ஓரணியில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் நின்றிருந்தார்கள். ஆனால் இன்று, தட்டிக்கேட்க தந்தைகூட இல்லாத பரிதாப நிலைக்கு ஆளாகிப்போனதால் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையாகி தன்னலம் பேனாத சிலரெல்லாம் சமுதாயத்தில் நல்லொழுக்கங்களை போதிக்க வந்ததாக கூறி ஒன்று பட்டிருந்த சகோதரர்களையும் சமுதாயத்தையும் கண்ட துண்டமாக்கி கண் போன போக்கிலும் கால் போன போக்கிலும் கண்ணா பிண்ணாமாக்கி இந்த ஊரை குட்டிச்சுவரும் கட்டமண்ணுமாக்கி விட்டார்கள். இவர்களெல்லாம் யாரென்று நாம் அடையாளம் காட்டாமலே, நடு நிலையான அணைவருக்கும் தெரியும். வினை விதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான் என்பதுபோல் எதையெதை யார்? யார் விதைத்தார்களோ? அதையதை அவரவர்கள் அறுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அறுத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்போது தெரிந்து கொண்டுதான் இருக்கும். அவரவர்களின் சுயநலத்திற்காகவும் தங்களைச் சார்ந்தவர்களுக்காகவும் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள் இன்று இந்த ஊரின் நிலையறிந்து மனதுக்குள் வருந்ததான் செய்கிறார்கள். இந்த சமுதாய மக்களுக்காகவும் இந்த கடையநல்லூருக்காவும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருந்தால் இந்த ஊர் இந்த சமுதாயம் எத்துனை எழுச்சிகளை கண்டிருக்கும். இப்படி நிலைகுலைந்தா போயிருக்கும் இந்த தெப்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள் இப்போது சில தனிப்பட்ட நபர்கள் தனக்கு சொந்தமான சொத்தென்று சுற்றிவருகிறார்கள் ஊர் ஒன்றுபட்டிருந்தால் தெப்பத்தை சுற்றி ஒரு வணிகவளாகமாக்கி ஒரு ஜும்மாபள்ளியுடன் கூடிய கிழக்குப் பகுதி அதாவது பிலால் பள்ளி முக்குக்கு கிழக்கு உள்ளவர்களுக்கு ஒரு மையவாடியாக உருவாக்கி இருக்கலாம். மேற்கே ஊராணியையும் பெரியதொரு ஈத்கா மைதானமாக்கலாம் அல்லது பெரிதொரு கல்லூpயாக ஆக்கியிருக்கலாம் இல்லையானால் நம் உரிலுள்ள பெரியவர்கள் சுகாதாரமாய் சுற்றிவரும் அழகிய பூங்காவாக்கலாம் அப்படியெதுவும் செய்யாமல் இப்படி இவைகளெல்லாம் கழிவு நீர்களால் கலங்கிப்போய் கேட்பாரற்று கிடப்பதால் நம் ஊருக்க சுகாதார கேடுதானே அதுமட்டுமில்லாமல் அட்டக்குளத்தின் தண்டைக்கார ஓடையும் பாப்பன் கால்வாயும் இப்படி கெதியற்றா கிடந்திருக்கும். நீரோடைகளை சுறுக்குகின்றபோது மழைவரத்தும் சுறுங்கி விடும் என்பது எவ்வளவு மெய்யாகி விட்டது. நீரோடைகளையும் தெருக்களையும் நடைபாதைகளையும் அபகரித்துக்கொண்டு இத்தனை அசுத்தங்களை அடைத்துக்கொண்ட அசுரர்களால் இந்த ஊருக்கு இத்தனை நோய்களும் நொம்பலங்களும், இப்படிப்பட்ட சுகாதார கேடினால் வர வாய்ப்புள்ளது என்பதை யாரும் மறுக்கவோ? மறைக்கவோ முடியாது சரி, இவைதான் இப்படியென்றால், இறைவனால் மன்னிக்க முடியாத குற்றமாய் கருதப்படும் குற்றம் இறைவனுக்கு இனைவைப்பது இத்தனை விழிப்புணர்ச்சி பெற்ற பின்பும் இல்லாதவர்கள் இருப்பதாய் தூக்கிக்கொண்டு அலையும் தேர், சப்பரம், பல்லாக்கு என்று இறைவன் ஈமான் கொண்டவர்களும் அவர்களைப்போல் கொடி, குருஸ், சந்தனக்கூடு என்றும் தூக்கிக்கொண்டு அலைவதை பார்க்கும்போது நம்மவர்களாய் இருந்து கொண்டு நரகத்தை நாடுகிறார்களே என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. இஸ்லாத்தையும் இறைவனின் கட்டளைகள் என்ன என்பதையும் அறிகிறோம். எம்பெருமானார் அவர்களினால் அருளப்பட்ட அரும் பெரும் வார்த்தைகளையும் நாம் அரபு மூலம் தமிழாக்கமாய் அணைவரும் தெரிந்து கொண்ட பின்னும் “அன்று அவர்கள் செய்தார்கள் அதைப்பின்பற்றி இன்றும் நாங்களும் செய்கிறோம் என்று விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு அலையும் சிலரைப்பற்றி நாம் என்ன சொல்வது.

இதுவரைக்கும் நம் ஊர் பெண் பிள்ளைகளையே கூட்டிக் கொண்டு ஓடிப்போவதாய் குறைகூறி திரிந்த நமக்கு, ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு வாலிபனே ஒரு வாலிபனையோ அல்லது ஒரு வாலிபியையோ சாராத ஒன்றை கூட்டி ஓடிவந்த கோலத்தை நீங்கள் நினைத்துப் பார்க்கையில் பெண்டாட்டி பெண் பிள்ளைகளோடு கூடி வாழ்ந்து கொண்டிருக்கிற நிலையில் வெளியே அதைப்பற்றி பேசவே கூச்சமாக இருக்கிறது. நம்மைப்பற்றி நாமே இழிவாகவும் கேவலமாகவும் பறைசாற்றுவது போலாகிறது. இஸ்லாத்தை வேரோடு தூரோடு துடைத்தெரிய வேண்டும் என்றும், முஸ்லீம் பெண்களை வசப்படுத்தி குழந்தை கொடுப்பதையே குறியாக கொண்டு அலையும் கொடும் வேங்கைகளை வெட்டி வீழ்த்தி நம்மையும் நம்குலப் பெண்களையும் அரணாக காத்திருக்க வேண்டிய இன்றைய இளைய சமுதாயம் இன்று எங்கு போயிக்கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வெட்கமாகத்தான் இருக்கிறது. கடையநல்லூரில் கடைபோட்டிருக்கும் அத்தனை இண்டர்நெட் பார்களிலும் போய் பார்க்கின்றபோது சின்னஞ்சிறுசுகளும் கம்பியூட்டர் படிப்பதாய் கூறி எத்தனையோ அறிவாய்ந்த அற்புதங்களை அறிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக பேஸ்புக்கில் புதைந்து விலைமாந்தர்களாய் இளமையை தொலைத்துக்கொண்டிருக்கும் இளஞர்களைபற்றி என்ன சொல்வது. நமது ஊர் எத்தனை பெரிய அநாகரீகத்தில் அடியெடுத்து போயிக்கொண்டிருக்கிறது அவரவர்களாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு என்று நம்மால் எப்படியிருந்திட முடியும் எந்த வீட்டிலோ எங்கோ நடக்கிற விஷயம்தானே என்று நாம் இப்படி கண் மூடித்தனமாக இருந்து விட்டால,; இது போன்ற விஷயம் நாளை நம் வீட்டிலும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான்பிள்ளை தானே வளரும் என்ற அடிப்படை ஆதங்கம்தான் நமக்குத் தோன்றுகிறது இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஊர் ஒன்று பட்டு ஒரு அமைப்பை அன்றே ஏற்படுத்தப்பட்டிருந்தால் இதற்கெல்லாம் ஒரு அனைகட்டியிருக்கலாம்தானே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் காதர்பாய்?”

“இந்த ஊரில் எத்தனையோ பேர்கள் சொல்வதை சொல்ல நினைப்பதை நீங்கள் உள்ளக்கிடங்கிலிருந்து வெளிபடுத்தி இருக்கிறீர்கள் என்றாலும் இப்போது நம் ஊரில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலை மட்டுமின்றி அடாவடித்தனத்திலிருந்தும் நம் மக்களை நேர்வழிக்கு அழைத்துச்செல்ல ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தியிருப்பதால் இன்ஷாஅல்லாஹ் அது செயல்பாட்டுக்கு வருகிறபோது இவைகளெல்லாம் கண்காணிக்கப்படலாம் ஹமீது பாய்”

“காதர்பாய் முஸ்லீம்களால் இயலாமல் போன ஒரு காரியம் இந்த உலகத்தில் இருந்ததே இல்லை, எல்லா நிலைப்பாடுகளுக்கும் இஸ்லாத்தில் ஒரு தீர்க்கமான தீர்வுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது அதற்காக அன்று வாழ்ந்து வழிகாட்டிய தியாகம் படைத்த செம்மல்கள் கடந்து வந்த பாதைகள் இதுபோன்று ஏராளம். அதைப்போல் இன்றும் நாம் நம் இளஞர்களை இறையச்சம் ஊட்டி புடம் போட்டு வார்த்தெடுக்க வேண்டும் அதற்காக நாம் ஏதாவது அர்பணங்கள் செய்தாக வேண்டும். நம் ஊரில் 32 அமைப்புகள் இருப்பதாகவும் அவைகளிலிருந்து அந்தந்த அமைப்புகளால் அங்கிகாரம் வழங்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களால் புதிய அமைப்பின் பொருப்புதாரிகளை தேர்ந்தெடுப்பதாய் இரண்டாம் முறை கூட்டப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றாலும், அதன்பிறகு அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அறிவதில் மக்கள் ரெம்ப ஆர்வமாகவும், நீண்ட எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அப்படி பொருப்புதாரிகளை தேர்ந்தெடுத்த அமைப்பினால் அதை சட்டவடிவமாக்கி அரசாங்கத்தால் அங்கிகாரம் பெறப்பட்டு நம் அமைப்பின் மூலம் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையானாலும் அரசாங்கத்தின் அதிகாரத்தலையீடு இல்லாமல் அமைப்பின் முடிவை அரசாங்கம் மட்டுமின்றி இந்த ஊரில் வாழும் அத்தனை முஸ்லீம்களும் ஆமோதித்து செல்லுகிற ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இதற்கான சட்ட திட்டங்களையும் செயல் பாடுகளையும் இந்த அமைப்புகள் ஒன்றுபட்டால் மட்டுமே முடியும் என்பது என்போன்றவர்களின் ஆவல். இத்தனை அமைப்புகளும் எதற்காக தோன்றியது தோற்றுவிக்கப்பட்டது நம் சமுதாயத்தில் புரைந்தோடிக்கிடக்கும் அநீதிகளை அகற்றவும், அரசாங்கத்தின் மூலம் அறிவிக்கப்படும் அனைத்து சிறுபான்மை சலுகைகளை உரியவர்களுக்கு பெற்றுத்தரவும், இல்லாதவர்களுக்கு உதவவும், அறியாதவர்களுக்கு தீனை எத்திவைக்கவும்தானே அமைக்கப்பட்டது. எதை எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் அனைத்து அமைப்புக்களின் கணக்கும் ஒன்றுதானே அப்படி ஒருங்கினைந்து ஒரு ஒற்றுமையை நம் ஊரில் நிலை நாட்டுவார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் காதர்பாய்”

“ஹமீதுபாய் எதிரும் புதிருமான அரசியல் கட்சிகள் தேர்தலின்போது கூட்டணி வைத்து செயல் படவில்லையா? நம்மவர்களுக்குள் இருக்கிற துவேஷங்கள் நிச்சயம் களையப்பட வேண்டியது மிக அவசியம். கட்சியமைப்பில் தலமைக்கு கட்டுப்பட்டு நடக்கும் அவசியம் வருகிறபோது அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் எதை தியாகம் செய்வார்கள் என்பதும் யோசிக்க கூடியதாகவே இருக்கிறது ஆகையால் அமைப்பில் இடம்பெறவிருக்கும் அங்கத்தினருடன் நம் ஊரைப் பொறுத்தவரை ஆரம்ப கால கட்டத்தில் கல்வி கற்று கடமையாற்றி தற்போது தன்னை ஓய்விலாற்றிக்கொண்டிருக்கும் எத்தனையோ புடம் போட்ட வல்லுனர்களான சட்டம் படித்த மேதைகள். காவல் துறையைச்சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள். தகவல் தொலைத்தொடர்பு துறையைச்சார்ந்தவர்கள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து துறைகளைச்சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் உள்ளடக்கிய அமைப்பாக கொண்டுவருவது மட்டுமில்லாமல் கடையநல்லூரில் வாழும் அத்தனை வீடுகளிலும் உள்ள ஒவ்வொருவரையும் உறுப்பினராக அமைப்பில் ஆக்கிக்கொள்வது மட்டுமில்லாமல் அனைவரிடமும் அமைப்பால் ஏற்படுத்தப்படும் அனைத்து காரியங்களுக்கும் ஆமோதிப்பதாய் கையெழுத்துக்கள் பெறப்பட்டு நடைபோட ஆரம்பித்தோமானால் இன்ஷாஅல்லாஹ் நாம் நடக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் நம் வீட்டை நம் ஊரை நம் சமுதாயத்தை முக்கியமாக நம் இளஞர்களை ஒரு நல்ல நிலைப்பாட்டுக்கு நிச்சயம் கொண்டு வரமுடியும் என்று நினைக்கிறேன் இது முடியுமா?”

“அதென்ன அப்படிச்சொல்கிறீர்கள், கொள்கைகளாலும் மதத்தாலும் வேறுபட்டு நின்றவர்களும் எதுவுமே செய்ய இயலாத சில ஊர்கள் கிராமங்கள் ஒன்று பட்டு எத்தனையோ சாதனைகளையும் புகழையும் அரசாங்கத்தின் மூலமும் மாவட்ட ஆட்சியாளர்கள் மூலமும் அவார்டுகள் வாங்கிக்கொண்டு இருக்கிற செய்திகளை நாம் செய்தித்தாழில் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் எங்கிருந்தோ யாரோ ஒருவரால் அறிவிக்கப்படுகிற ஒருவரை எத்தனையோ வேறுபாடுகளையும் விதர்ப்பங்களையும் மறந்து எம்பியாகவும் எம்எல்ஏ வாகவும் தேர்ந்தெடுக்க, உறவு முறை பார்க்காமல் மண்டைகளை உடைத்துக்கொண்டு ஒருமாத காலம் ரோட்டோடும் தெருவோடும் இரவு பகல் பாராமல் எங்கு வந்து என்ன பேசுகிறோம் என்றுகூட நினைக்காமல்; வாய் கிழிய செய்யாததை எல்லாம் செய்ததாகவும் கிடைக்காததையெல்லாம் வாங்கி தந்ததாகவும் ஆட்டோவிலும் கார்களிலும் ஸ்பீக்கரை கட்டிக்கொண்டு அறைகூவல் விடுத்தவர்கள்தானே? பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கையில் பெற்றவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் அனுமதி வாங்கியும் வாங்காமலும் பாவம் ஐந்தாம் வகுப்பு மாணவன் முதல் பிளஸ் டூ மாணவர்கள் வரை வேன்களில் ஏற்றிக்கொண்டு அவர்களைப்பற்றியும் அவர்களின் படிப்பை பற்றியும் கொஞ்சம்கூட கவலைப்படாமல் கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக தனித்தனியாக பிஞ்ச பளாபெட்டியாய் தார்தம்பட்டையோடு நெல்லை, மதுரை, தஞ்சை சென்னை என்று படையெடுத்து சென்றவர்கள் இன்று ஒன்று பட்டு கடையநல்லூர் முஸ்லீம் ஜமாத்து மூலம் நிச்சயமாக இந்த ஊரை ஒன்றுபட்டு நின்று ஒரு முன்னோடியான ஊராய் திட்டமிட்டு கொண்டு வருவார்கள் இன்ஷாஅல்லாஹ்”

“நீங்கள் சொல்வது சரிதானென்று எனக்கு தெரிந்தாலும் நம் சமுதாய மக்கள் தங்களின் தலைமுறைகளை சரியானதாக உருவாக்க வேண்டுமென்றால் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் கருத்து வேறுபாடுகளை களைந்தெறிந்துவிட்டு கடையநல்லூர் சமுதாய மக்களுக்காக களம் இறங்கினோம் என்றால் இன்ஷாஅல்லாஹ் நாளைய நம் தலைமுறை தலை நிமிர்ந்து வீரு நடைபோடும் என்பதில் சந்தேகமில்லைதான் ஹமீதுபாய்”

“காதர்பாய் மக்ரிபுக்கு நேரம் நெருங்குகிறது. நாம் இப்போது சந்தித்து பேசிக்கொண்டதும் கடந்;த காலத்தை ஞாபகப்படுத்தியதும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. கடந்து வந்த பாதையை நாம் திரும்பி பார்த்தோமானால் தவரானவைகளை தவர்த்துக்கொள்வோம் என்பதற்காக என் மனதிலுள்ள ஆதங்கத்தைதான் உங்களிடம் வெளிப்படுத்தினேன் இன்ஷாஅல்லாஹ் இனியொரு வாய்ப்பு இப்படி கிடைக்குமானால் மற்ற விபரங்கள் குறித்து நாம் பேசிக்கொள்வோம் சரியா காதர்பாய் அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்”

“வ அலைக்கும் ஸலாம் ஹமீதுபாய் பீ அமானுல்லாஹ்”

செங்கோட்டையன்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை