கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, புதிய தமிழகம் கட்சிவேட்பு மனு தாக்கல் செய்தனர்.
30th September 2011 · 0 Comments
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான அப்துல் லத்தீப்பிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக-முத்துலட்சுமி: அதிமுக சார்பில் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், விவசாய அணி இணைச் செயலர் ஆனைக்குட்டிப்பாண்டியன், தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன், நகரச் செயலர் கிட்டுராஜா, மாவட்ட மருத்துவரணிச் செயலர் மருத்துவர் சஞ்சீவி, ஒன்றியச் செயலர் முத்துப்பாண்டி, நயினா முகமது, தங்கத்தாரகை மன்றத் தலைவர் நாகூர்மீரான், மாவட்டப் பிரதிநிதி பெருமையாப்பாண்டியன், மாணவரணி இணைச் செயலர் அருள்ராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.
தேமுதிக-ஜெயந்தி: தேமுதிக சார்பில் ஜெயந்தி மனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் முன்னாள் மாவட்டச் செயலர் திருப்பதி, நகரச் செயலர் சரவணன், மாவட்ட மன்ற இணைச் செயலர் சாந்தி ராமச்சந்திரன், அதியமான், அய்யாத்துரை உள்ளிட்டோர் சென்றனர்.
காங்கிரஸ்-சந்திரா: காங்கிரஸ் சார்பில் சந்திரா மனு தாக்கல் செய்தார். நகர்மன்றத் தலைவர் காளிராஜ், நிர்வாகிகள் அய்யாத்துரை, செல்வராஜ், குலாம், மாரியப்பன், நவாஸ்கான், பெரியசாமி, முருகேசன், கணேசன், சாமிநாதன், பட்டு உள்ளிட்டோர் சென்றனர்.
மதிமுக-சாந்தி: மதிமுக சார்பில் சாந்தி மனு தாக்கல் செய்தார். இவருடன் நகரச் செயலர் குமார், நிர்வாகிகள் வேலாயுதம், முருகன்,ஜெய்சங்கர், யூசுப், குலாம், பாண்டி, முத்தையா உள்ளிட்டோர் சென்றனர்.
புதிய தமிழகம் -ராணி: புதிய தமிழகம் கட்சி சார்பில் ராணி மனு தாக்கல் செய்தார். ஒன்றியச் செயலர் குமார், நகரப் பொறுப்பாளர்கள் மகேஷ், ரமேஷ், நிர்வாகிகள் ஏசையா, முருகையா, சுடலை உள்ளிட்டோர் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூர் நகராட்சி துணைத் தலைவர் பதவியையும் திமுக கைபற்றியது .
- 14 -ஆவது வார்டு கவுன்சிலர்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு!
By P.S.Md Ali
Readers Comments (0)
Comments are closed.


