Filed Under:  தமிழ் நாடு

அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முடக்கம்

30th November 2011   ·   0 Comments

பிலிம் தட்டுப்பாடு காரணமாக அரசு மருத்துவமனைகளில்
எக்ஸ்ரே பரிசோதனை முடக்கம்

சென்னை,
`பிலிம்’ தட்டுப்பாட் டால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை கள், தாலுகா மருத்துவ மனைகளில், எக்ஸ்ரே பரி சோதனை பாதிக்கப்பட் டுள்ளது.
முடநீக்கியல் மருத்துவர் ஒருவர், இதுகுறித்து கூறும் போது, “பிலிம் தட்டுப்பாடு காரணமாக, கடந்த ஒரு மாதமாக எக்ஸ்ரே பரிசோ தனை முடங்கிப் போய் உள் ளது. தேவையான அளவு வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை,” என்றார்.
அரசு மருத்துவமனை களுக்கு தேவையான எக்ஸ்ரே பிலிம்கள், மத்திய பொதுத் துறை நிறுவன மான, `இந்துஸ்தான் போட்டோ பிலிம்’ நிறுவ னத்திடம் இருந்து கொள் முதல் செய்யப்படுகிறது. மத்திய கொள்முதல் இயக் ககம் நிர்ணயித்த விலைப் படி, இந்த நிறுவனம், ஒரு பெட்டி (50 பிலிம்கள்) 480 ரூபாய்க்கு, அரசு மருத்துவ மனைகளுக்கு வினியோகம் செய்தது.
சமீபகாலமாக, வெள்ளி விலை கடுமையாக உயர்ந்து விட்டதால், மத்திய கொள் முதல் இயக்ககம் நிர்ண யித்த விலையில், பிலிம் களை வழங்க அந்த நிறுவ னம் மறுத்துவிட்டது. அரசு நிர்ணயித்த விலையை விட, வெளிச் சந்தையில் இரு மடங்கு விலை உள்ளதால், குறைந்த விலையில் சப்ளை செய்ய இயலாது என, நிறுவனம் சார்பில் விளக் கம் அளிக் கப்பட்டது.
இதையடுத்து, பெரிய மருத்துவமனைகளில், அவ சர சிகிச்சைகளுக்கு மட் டும், டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மயக்க மருந்து செலுத்தி செய்யப் படும் அறுவை சிகிச்சை களுக்கு, `நைட்ரக்ஸ் ஆக் சைடு’ சிலிண்டர் தட்டுப் பாடு காரணமாக, சென் னையில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைகள் பாதிக் கப்பட்டுள்ளன.
இது குறித்து மருத்துவ மனை நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மழை கார ணமாக சிலிண்டர் வினி யோகம் பாதிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் முதல் வழக்கமாக சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வரு கின்றன என்றார்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக் குனர் சத்யபிரதா ஷாகு கூறியதாவது:
இரண்டு மாதத்துக்கு பிலிம் சப்ளை செய்யும் வகையில், குறைந்த கால டெண்டர் கோரப்பட்டு, அதன்படி, அரசு மருத்துவ மனைகளுக்கு பிலிம் சப்ளை செய்யப்பட்டது.
குறைந்த கால டெண் டர் ஒப்பந்தமும், கடந்த வாரம் முடிந்ததை தொடர்ந்து, முழுமையான டெண்டர் கோரப்பட்டது. டெண்டரில் குறைந்த விலை குறிப்பிட்டுள்ள புதிய நிறுவனமும் முடிவு செய்யப்பட்டு விட்டதால், ஒரு வாரத்துக்குள் அரசு மருத்துவமனைகளுக்கு வழக்கமான அளவு பிலிம் கள் சப்ளை செய்யப்படும்.
இவ்வாறு ஷாகு கூறினார்.

-தகவல்
க.கா.செ.
கடையநல்லூர்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.