அறிவிக்கப்படாத மின்வெட்டு! தொடரும் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு!
13th February 2012 · 0 Comments
தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி சேலம் மற்றும் ஆண்டிப்பட்டியில் விசைத்தறி தொழிலளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கலில் லாரி பாடி கட்டும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறது. மின்வெட்டை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 ஆயிரம் விசைத்தறி மற்றும் 2 ஆயிரம் கைத்தறி கூடங்கள் மூடப்பட்டன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலளார்கள் கூறுகையில், 8 மணி நேரம் மின்வெட்டு என்றார்கள். ஆனால் தற்போது 10 மணி நேரத்தையும் தாண்டி மின்வெட்டு உள்ளது. இந்த நிலை நீடித்தால் எங்களுக்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை வந்துவிடும். பிள்ளைகள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்றனர்.
சேலத்தில் மின்வெட்டை கண்டித்து, விசைத்தறி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தாதம்பட்டியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று உடையாம்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மின்வெட்டு காரணமாக நாமக்கல்லில் இயக்கும் 250 லாரிகளுக்கு பாடி கட்டும் பட்டறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் குறிப்பிட்ட நேரத்தில் லாரிகளை வடிவமைத்து கொடுக்க முடியவில்லை என்று லாரி பாடி கட்டும் பட்டறைகளின் தொழிலாளர்களும், உரிமையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளனர். மின்வெட்டை சரிசெய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என்று லாரி பாடி கட்டும் பட்டறை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: நக்கீரன்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


