Filed Under:  விளையாட்டு

இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

1st February 2012   ·   0 Comments

ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது . டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புகளுக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வடே அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் அஸ்வின், வினய்குமார், ரெய்னா, சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது. அணியின் ஸ்கோர் 6 ஆக இருக்கும் போது 4 ரன்களில் ஷேவக் ஆட்டம் இழந்தார்.

அடுத்து அணியின் ஸ்கோர் 47 ஆக இருக்கும் போது காம்பிர் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 53 ஆக இருக்கும் போது கோக்லி ஆட்டம் இழந்தார்.

81 ரன்களில் இந்தியா 6 விக்கெட்டை இழந்தது. பின்னர் கேப்டன் டோனியும், தமிழக வீரர் அஸ்வினும் நிலைத்து நின்று ஆடினர்.

20 ஓவர்களில் அவர்களால் 140 ரன்களுக்கு தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முடிந்தது. இதனால் இந்திய அணி 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.