Filed Under:  விளையாட்டு

இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

12th February 2012   ·   0 Comments

முத்தரப்பு ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அடிலெய்டில் இன்று நடந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அறிமுக வீரர் பாரஸ்ட் 66 ரன்களும், டேவிட் ஹசி 72 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில், வினய் குமார் மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 92 ரன்கள் எடுத்தார்.

By:உஸ்மான்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.