Filed Under:  விளையாட்டு

இலங்கை அணி மீது ரசிகர்கள் கோபம்

28th February 2011   ·   0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி மீது, ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்த்து மோதிய 6 போட்டிகளில், ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை. இந்த வேதனையான சாதனையை மாற்ற, இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து ஏழாவது முறையாக, பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இது அந்நாட்டு ரசிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அனுராதா என்ற ரசிகர் “டெய்லி மிரர்’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்,”" வீரர்கள் விளம்பரத்தில் கவனம் செலுத்த துவங்கியதால் சிறப்பாக விளையாட முடியவில்லை. தேசத்துக்காக விளையாடாமல் தனிப்பட்ட சாதனைகளுக்காக வீரர்கள் விளையாடுவதால் தான், எதிர்பார்க்காத தோல்வி கிடைத்தது,” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மீடியா அதிகாரி நிலந்தா ராஜேந்திரா கூறுகையில்,”" பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஒரு சில வீரர்கள் அணிக்காக ஒருங்கிணைந்து விளையாடவில்லை,” என்றார்.
அதிக எதிர்பார்ப்பு:
மற்றொரு ரசிகர் சுனில் பெரேரா கூறுகையில்,”" நமக்கு கோப்பை வெல்லும் திறமை <உள்ளது. ஆனால், ரசிகர்களிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள், தொடர் துவங்கும் முன்பே, நாம் கோப்பை வென்றுவிட்டதாகவே நினைக்கின்றனர். இதற்கு இன்னும் அதிக பயணம் செல்ல வேண்டும்,” என்றார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.