உலக தமிழ் படைப்பாளிகள் மையம் அமைக்க வேண்டும் : வைரமுத்து
31st October 2011 · 0 Comments
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில், உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்து பேசினார்.
அவர், ‘’இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது என்று கருதப்படுகிற ஞானபீடம் பரிசை கன்னட மொழி 8 முறை பெற்று இருக்கிறது. ஆனால், தமிழ் மொழி 2 முறை தான் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசின் இறுதி பட்டியலில் 2 இந்திய படைப்பாளிகள் இடம் பெற்று இருந்தனர்.
ஆனால், தமிழ் படைப்பாளியின் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
போகச் சமுதாயத்திலும், போர் சமுதாயத்திலும் தான் உன்னத இலக்கியங்கள் பிறக்கும்.
இன்று தாய்த்தமிழ்நாட்டை விட தமிழ் ஈழத்திலும், கடல் கடந்த இலங்கைத் தமிழர்களிடமும் தான் உன்னத இலக்கியம் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உலகத் தமிழ்படைப்பாளிகளை ஒன்றுகூட்ட உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் மையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் அதற்கு பொருத்தமான தளமாக திகழும்’’ என்று பேசினார்.
தகவல் : நல்லூரான்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By Abu Aasima
Readers Comments (0)
Comments are closed.


