Filed Under:  செய்திகள், தமிழ் நாடு, தேர்தல் ஸ்பெஷல்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,படுதோல்வி : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேச்சு

27th October 2011   ·   0 Comments

“உள்ளாட்சி தேர்தலில் சட்டசபை தேர்தலை விட அதிகமான தோல்வியை திமுக விற்கு தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்’ என அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தா.

நெல்லை புறநகர் வடக்கு மாவட்டத்தில் திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் பலர் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

 

“”தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் சட்டசபை தேர்தலை போன்றே அதிமுகவிற்கு அமோகமான வெற்றி வாய்ப்பினை தமிழக மக்கள் தந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு மாத காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு முழுமையான அளவில் மக்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பதற்கு கிடைத்த சான்றுதான் உள்ளாட்சி தேர்தலின் வெற்றியாகும்.

இந்த தேர்தலை பொறுத்தவரை சட்டசபை தேர்தலை விட திமுகவிற்கு அதிகமான தோல்வியை தமிழக மக்கள் மீண்டும் வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் அதிமுகவிற்கு சட்டசபை தேர்தலை காட்டிலும் கூடுதலான வெற்றியை தந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் அளித்த ஒட்டுக்களின்படி அவர்களின் நம்பிக்கையும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்றார்.

தகவல் : நல்லூரான் 

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.