கடையநல்லூரில் இடியுடன் கூடிய கன மழை
11th February 2012 · 1 Comment
கடையநல்லூரில் இடியுடன் கூடிய கன மழை


கடையநல்லூரில் இன்று(11.02.2012) மாலை சுமார் 5 மணியளவில் ஒன்றரை மணி நேர இடியுடன் கூடிய கனமழை பெயய்ததன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.ஒரு சில இடங்களில் மழை நீர் ஆறாக ஓடியதை காணமுடிந்தது.மழை பெய்து கொண்டிருக்கையில் வழக்கம்போல் மின்சார தடை இருந்ததால் மக்கள் வெகுவாக பாதிக்க பட்டனர்.
கடையநல்லூரில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாத சூழ்நிலையில் இன்று பெய்த மழையில் பெரியதெரு,அல்லிமூப்பன் தெரு சந்திப்பில் உள்ள மூடப்படாத பள்ளத்தில், அங்கே நின்று கொண்டிருந்த கார் ஒன்று மூழ்கிய நிலையில் உள்ளது கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல்:அசன்
புகைப்படம்:அசன்,அமீர்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
- கடையநல்லூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி:என்ன படிக்கலாம்!எங்கு படிக்கலாம்!
By yousuf
Readers Comments (1)
Comments are closed.



அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் – இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. Quran(7:57)