Filed Under:  அபுஸாயிமா பக்கம்

கடையநல்லூரில் இஸ்லாத்திற்கு எதிராக கொக்கரிக்கும் “எச்சங்களுக்கோர் எச்சரிக்கை”

31st January 2012   ·   0 Comments

எச்சங்களுக்கோர் எச்சரிக்கை
———————————————-

எமதூரில் சில தினங்களாய்
சில பித்தர்களால் பரபரப்பு

கண்மணி முஹம்மது நபியை
கடும் சொற்களால் இகழ்ந்தனராம்

மேலான லூத் நபி அவர்களை
பைத்தியம் எனப் பழித்தனராம்

சுய விளம்பர வெள்ளை பூச அவர்கள்
சுண்ணாம்புக் காளவாயில் குளித்தனராம்

கீழான அவரின் செயல் கண்டு
கிழிந்திட்ட மனதாய் வருந்துகிறேன்

பொங்கிய உணர்ச்சி அடக்கி
இம்மடலால் அவரை எச்சரிக்கிறேன்

கொடுங்கோலன் சைத்தானின்
வழித்தோன்றலாய் வந்தவரே….!

கோமானைக் குறைப்படுத்தி
குணமென்ன கண்டீர்கள்…?

சத்தான இஸ்லாமெனும் தோட்டத்தில்
தீதான விஷநீர் பாய்ச்சுவதேன்?

இஸ்லாத்தின் ஆட்சி இங்கிருந்தால்
இச்சமயம் உங்கள் கதி என்னவாகும்…?

பகையோரின் இரும்புப் படைகளையே எதிர்கொண்டோம்…. வென்றோமே …
உம்போன்றோரின் துரோகத் துரும்புகளை விட்டு வைப்போமா…?

சாக்கடைக்குள் நீந்திக் கொண்டு நாறும் நீங்களா
சத்திய சந்தனத்தின் மணத்தை சந்தேகிப்பது …?

சுன்னத்தும் ஜன்னத்தும் அறியாத சூனியங்களே நீங்களா
எங்கள் புண்ணிய தங்க நபியின் தரம் உரசிப் பார்ப்பது…..?

இலாஹியும் சலாமும் விளங்கா ஈனர்களே நீங்களா
எங்கள் அலைஹிஸ் ஸலாம்களை அவமதிக்கத் துணிவது…?

உங்கள் பெயர் மட்டும் இஸ்லாமிய அடிப்படையில்
செயல் அனைத்தும் சைத்தானின் அடிச்சுவட்டில்

நிறுத்துங்கள் உங்கள் இழிந்த வீண் செயல்களை
நினைவில் இருத்துங்கள் நாங்கள் பொறுமை காப்பதை

கல்புகளை கழுகுங்கள் இஸ்லாமிய நற்குண நீரெடுத்து …இல்லையேல்
விலகிக் கொள்ளுங்கள் இஸ்லாமிய நெறியிலிருந்து

வாருங்கள் அகம் கழுவி இஸ்லாமிய அழகோடு கூடி…விருப்பம் இல்லையெனில்
மாறுங்கள் இறை நிராகரிப்பு எனும் அழுக்கான மார்க்கம் நாடி……

இப்படிக்கு
இஸ்லாமிய உணர்ச்சியுடன்
அபுஸாயிமா

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.