Filed Under:  நல்லூர்

கடையநல்லூரில் நள்ளிரவு முதல் தொடர் மழை

31st December 2011   ·   0 Comments

வங்க கடலில் நிலை கொண்டிருந்த தானே என்ற பெயர் கொண்ட புயல், நேற்று காலை புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடந்தது.

 இந்த புயல் காரணமாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறினார்.

நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்,நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே செங்கோட்டை ,கடையநல்லூர் ,தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் நன்கு மழை பெய்தது,
அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, மேலும் மனதிற்கு இதமான குளிர் காற்றும் வீசியதால் மொத்தத்தில்ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் ஆறாக ஒடியதை காண முடிந்தது.
Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.