கடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……!
22nd March 2012 · 26 Comments
கடையநல்லூர்வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……!
வீடு திரும்ப விடை கிடைக்குமா ?
1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள் .வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது .ஏனென்றால் எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் ,என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் .எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து ,பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் .மனம் படபடத்தது.அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் .இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் .அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -ஐ பார்க்க சென்றோம் .காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் .நாளை காலை உனக்கு பிளைட் என்றார் .நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம் .காலையும்,மதியமும் சாப்பிடவில்லை .கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற ,வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன்.இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் .என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .
மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் .வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா .நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது .இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது .காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் .எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார் .எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில் .இங்கு இதை பக்கால என்பார்கள் .
நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் .நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன் .இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது .யாரும் இல்லாத ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன் .என்னையே பிரமிக்க வைத்தது .அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய்வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .
இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன் .என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன் .ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை .என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன் .அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுட்ரிதிரிவதாக என் மனைவி என்னிடம் கூறினாள்.காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை .தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்துவிடாதீர்கள் .
இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது .காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை .தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக்கொள்வதை பார்த்திருக்கிறேன் ,எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள் .ரிஸ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான் .முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.
அன்பான சகோதரர்களே ,நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு ,இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .
அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் ,என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன் .
இப்படிக்கு
கண்ணீரோடு …!
நானும் ஒரு கடையநல்லூர்வாசி
prepared by p.s.முஹம்மது அலி
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
- கடையநல்லூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி:என்ன படிக்கலாம்!எங்கு படிக்கலாம்!
By P.S.Md Ali
Readers Comments (26)
Comments are closed.



அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பயனுள்ள செய்தி. நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
அயல் நாட்டு வாழ்கை ஆரம்பத்தில் கடினமாக தெரிந்தாலும் பின்பு பழகி நம்மை அடிமை படுத்துகிறது பலபேர் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் முடிவதில்லை.இன்னும் சிலர் இடையில் முடித்துவிட்டு வந்து ஓரிரு வருடங்களில் சுவரில் அடித்த பந்துபோல திரும்புகிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அயல் நாட்டு வாழ்கை ஆரம்பத்தில் கடினமாக தெரிந்தாலும் பின்பு பழகி நம்மை அடிமை படுத்துகிறது பலபேர் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் முடிவதில்லை.இன்னும் சிலர் இடையில் முடித்துவிட்டு வந்து ஓரிரு வருடங்களில் சுவரில் அடித்த பந்துபோல திரும்புகிறார்கள்..
இது ஒரு அறிவுரை அல்லாஹ்.
நம் அனைவரையும் நன் மக்களாக.
ஆக்குவானாக ஆமீன்
இளமை காலமெல்லாம் வெளிநாட்டில் இருந்து விட்டு பின்பு ஊருக்கு வந்த பலபேர் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகிறார்கள். அதுவரைக்கும் ஒரு விருந்தாளி போல் அவர் குடும்பத்தில் அவரை பார்த்திருப்பார்கள் அதாவது வருசத்திற்கு ஒருமுறை கொஞ்சநாள் மட்டும் அவர் அவரின் குடும்பத்தார்களை சந்தித்திருப்பார் மனைவி,பிள்ளைகள் அதுவரைக்கும் அவர்களது பாணியில் செலவு செய்து,வாழ்ந்து பழக்கப்பட்டு இருப்பார்கள் இவர் வந்து பின்பு இதில் தலையிடும் போது குடும்பத்தில் சண்டை வரும் இதனால் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
எங்க வே.தி.காதர் அண்ணன் சொன்னது சரியே?
அல்லா நமக்கு ஒரு விடிவு காலம் தருவானாஹா. ஆமீன்.
நம் வீட்டிற்கே நாம் ஒரு விருந்தாளியை போல செல்வது மிக கொடுமை.
அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,
இங்கே அன்பு சகோதரர் அவர்கள் ஒரு நீண்ட அனுபத்தினை பகிர்ந்திருக்கிறார். இதில் நிறைய பாடம் அனைவருக்கும் இருக்கிறது.
1. முதலாவதாக நமது சமுதாயம் கல்வியைனைப் புறக்கணித்து, கந்துவட்டிக்கு வாங்கியாவது அரபு மண்ணை மிதித்துவிட வேண்டும் என்று நினைத்தது.. ( அல்ஹம்துலில்லாஹ், தற்சமய்ம் கல்வியில் சிறிது முன்னேற்றம் துளிர்க்கிறது) அப்படி செல்வதால் அனேகர் ஆடம்ப்ர வாழ்க்கைக்காவே தன் வாழ்நாளை அங்கு செலவழிக்கின்றனர்; இன்னும் அரபியர்களின் ஆடம்பர/சொகுசு வாழ்க்கை இவர்களுக்கு காலப்போக்கில் அனிச்சையாகவே மாறிவிடுவது துரதிர்ஷ்டம். வெகு சிலரே சேமிப்பில் கவனம் கொள்கின்றனர்.
2. நம்நாட்டில் விலைவாசி என்பது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக விண்ணைநோக்கி வளர்கிறது. ஆகையால் திட்டமிடுதலில் நம்மவர்கள் தோல்வியுறுகின்றனர். எனக்குத் தெரிய அனேகமான நண்பர்கள், ”அடுத்த முறையோடு முடித்துக் கொண்டு வந்து ஊரில் ‘செட்டில்’ ஆகலாமென்று இருக்கிறேன்” என்பார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வந்தவுடன், ”அய்யோ விலைவாசி கழுத்தை நெரிக்குது 2இலட்சம் கடனிருக்கிறது, அடுத்தமுறை பார்க்கலாம்” என்று அங்கலாய்ப்பவர்கள் தான் அதிகம். முறையாக தானும் தன் குடும்பத்தினரும் திட்டமிடாததும் தான் இதற்கு முழுமுதற்காரணம்.
3. பிள்ளைகள் படிப்பு / மேற்படிப்பு என்றொரு பொதுக்காரணமும் முன்வைக்கப்படுவதை பொதுவாக காணலாம். நான் இதுபோன்றோரைக் கேட்பதெல்லாம் ஒன்றுதான், தயவு செய்து ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்திலோ அல்லது மாவட்டதிலோ முதலாவதாக வரும் மாணவன் / மாணவியின் பேட்டியினை நாளிதழ்களில் படித்துப்பாருங்கள்; எனக்குத் தெரிந்து யாரும் என் அப்பா எனக்காக வெளிநாட்டில் உழைக்கிறார் அதனால் நான் கவனமாகப் படித்து முதலிடம் பிடித்தேன் என்று சொல்லவில்லை. மாறாக, என் தந்தை ( சில குடும்பங்களில் அம்மா) எங்களுக்காக கஷ்டப்படுவதை பார்த்தேன், இவர்களை நல்ல நிலையில் வைக்கவேண்டும் ஆகையினால் நான் நன்றாகப் படித்தேன் என்ற வரிகள் நிச்சயம் இருக்கும்; முந்தைய ஆண்டு யாஸ்மின் என்ற முஸ்லிம் மாணவி சொன்னது கூட நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும், “ என் தந்தை டி.வி.எஸ் -50 ல் வெயிலில் அலைந்து துணி வியாபாரம் செய்து எங்களைப் படிக்க வைத்தார்….” என்று அந்த மாணவியின் குரல் நம்மில் ஒலிக்கும்.
இதற்காக வெளிநாட்டில் இருக்கும் தந்தைகள் கஷ்டப்படவில்லை என்று பொருள் இல்லை, மாறாக கஷ்டத்தினை கண்முன்னே பார்க்கும் குழந்தைகளுக்கும், வெறுமனே ஃபோன் மூலம் அறியும் குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு.
வெளிநாட்டில் வாழும் தந்தைகள், வருடங்களாக பிள்ளைகளுக்காக கஷ்டப்படும் தங்களை எப்படி தன்பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திக்கொள்கிறார்களென்றால், வண்ணவிளக்குகள் ஜொலிக்க, உயரமான கட்டிடங்களுக்கு முன்னிலையில், விலையுயர்ந்த (யாருக்கோ சொந்தமான) படகு போன்ற காரின் முன் தங்களை ஃபோட்டோ எடுத்து ஊருக்கு அனுப்புகிறார்கள்…. ஊருக்கு வந்தால் கட்டுரையாளர் சொல்வது போல இலட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். சொல்லுங்கள் எந்தக் குழந்தை சார் சொல்லும் என் அப்பா கஷ்டப்படுகிறார் என்று???
விளைவு, பிள்ளைகள் குறிப்பாக ஆண்பிள்ளைகள் வெளிநாடு வாழ் அப்பாக்களை ஒரு ஏ.டி.எம் இயந்திரமாக மட்டுமே நினைக்கிறார்கள்.
வருடக்கணக்கில் பிரிந்திருந்து வரும் அப்பாக்களோ பிள்ளைகள கண்டிக்கக வேண்டும் என்றோ அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்கவேண்டுமென்றோ நினைப்பதில்லை.
கோரிக்கை என்னவெனில், குடும்பத்திற்காக உழைக்கிறேன்/கஷ்டப்படுகிறேன் என்று எண்ணி குடும்பத்தை கவனிக்காமல் இருந்திடாதீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒவ்வொருநாள் நிகழ்வுகளும் உங்களின் கவனத்தின் கீழ் வரவேண்டும், எதிர்காலத்தின் தேவைக்கான சேமிப்பு பற்றி குடும்ப உறுப்பினர் அனைவரின் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு வேண்டும், தேவைப்படின் குறைந்த அளவு சம்பாத்தியம் கிடைத்தாலும், குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினை வளார்த்துக்கொள்ளல் வேண்டும், நம் நிலைகளை உயர்த்திக்கொள்ள இறைவனிடத்தில் இறைஞ்சக் கற்றுக்கொள்ளவேண்டும்.
வல்ல அல்லாஹ், எல்லோரின் துயர் போக்கி வாழ்வில் அமைதியருள வேண்டுமாய் பிரார்த்திக்கும் – ரஃபீக் சுலைமான்
(எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு, சவுதியில் வேலை என்றவுடன் சமாதனம் செய்து அனுப்பிவைத்தார்கள், வேலையோ பொம்மைக்கடையில் பாதிநாள்; பேரீச்சைத் தோட்டத்தில் மீதிநாள் என்று- வருடங்களை ஓட்டிவிட்டு, “ அல்லாஹ் முப்பிர் ரப்பிஸ் ஸவூதிய, ஹுவ ரப்பில் ஆலமீன்” என்று அரபியிடம் அரபியில் சவால் விட்டு இந்தியா வந்து 15 ஆண்டுகள் ஆகிறது.
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் என்னை இன்று பல தளங்களில் உயர்த்தியிருக்கிறான்.
வருமுன் காப்போம் அல்லா எல்லோருக்கும் நலருள் புரிவனாக.
வருமுன் காப்போம் அல்லா எல்லோருக்கும் நலருள் புரிவனாக.
Brother, you sacrifice your life for your children like a burning candle. Living in other country without our family is just like selling our eyes to buy a picture (portrait). Insha Allah we would make business or other employment opportunities for our children by using our foreign exchange wisely in near future. Who knows, even you brother, had you have business in kadayanallur , you would have become a successful millionaire!
AAMEEN
ALLAH ARULPURIVAANAGA
unnmaiyai sonneerkkal… thanks
Assalamu Alaikum allah unkaluku arulpurivanaga melum unkaluku barakath seivanaga, insha allah ungal magan orunal unkalai purinthu kolvan avankalukaga dua seiyavum…..
inshaallah
அல்லாஹ் அருள்புரிவானாக………
வருமுன் காப்போம் அல்லா எல்லோருக்கும் நலருள் புரிவனாக.
அமீன்
அல்லாஹ் உங்களுடைய சுமையை லேசாகுவனாக…….ஆமீன்……
insha allah.
allah ungal anaithu pracinaikkaanxkkiio.
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக! ஆமீன்
nalla sethi thanthamaikku en manamarntha nandre.
iravanin arul eppothum nam yellorukkum irukkum aameen.
Assalamu Alaikum allah unkaluku arulpurivanaga melum unkaluku barakath seivanaga, insha allah ungal magan orunal unkalai purinthu kolvan avankalukaga dua seiyavum.
அன்புள்ளவரே… உங்களின் ஆதங்கம் பார்த்தேன்… வேதனையை பகிர்ந்துள்ள நீங்கள் சாதனையை மறந்துவிட்டீர்களே… என http://ibulla.wordpress.com/ பக்கத்தில் இன்று இதை விளக்கித்தருகிறேன்… முடிந்தால் படித்து அமைதி காணுங்கள்…
வருமுன் காப்போம் அல்லா எல்லோருக்கும் நலருள் புரிவனாக.