கடையநல்லூர் பள்ளியில் “மக்கட்டி துராப்” காபிர் என்று அறிவிப்பு
31st January 2012 · 0 Comments
கடையநல்லூர் பள்ளியில் “மக்கட்டி துராப்” காபிர் என்று அறிவிப்பு.
கடையநல்லூர் மக்கட்டி குடும்பத்தை சேர்ந்த துராப் என்பவர் மெயின் பஜாரில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இவர் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை கொண்டவர்.சமீபத்தில் தன்னுடைய இணையதள பக்கத்தில் இஸ்லாத்தை பற்றியும் நபிமார்கள் பற்றியும் அவதூறாக கட்டுரை எழுதி கடையநல்லூர் முஸ்லீம்களின் கோபத்திற்கு ஆளானார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்ப்பு குரல்கள் தினமும் இணையதளம் வழியாகவும் நேரிலும் வலுத்துக்கொண்டு வந்த நிலையில்,கடையநல்லூர் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
இந்த சூழ்நிலையில்,இவர் கடையநல்லூர் பரசுராமபுரம் பகுதியை சேர்ந்தவர் என்ற முறையில் இன்று (31.01.2012) பரசுராமபுரம் தொழுகை பள்ளியில் வைத்து ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் மக்கட்டி துராப்பை விசாரித்ததில்,அவர் தான் காட்டுரை வெளியிட்டதை நியாப்படுத்தும் விதத்தில் பேசினார்.இதனை தொடர்ந்து இஸ்லாத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்தை பற்றி தொடர்ந்து விமர்சித்து கொண்டிருக்கும் மக்கட்டி துராப் என்பவரை காபிர் என்று அறிவிக்கப்பட்டதுடன் அவரிடம் கையெழுத்து வாங்கி கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரளாக பரசுராமபுரம் பள்ளியை நோக்கி குவிய தொடங்கினர்.
சில இளைஞ்சர்கள் காபிரான இவனை ஏன் பள்ளியில் வைத்துள்ளீர்கள்?வெளியே துரத்துங்கள் என ஆவேசமாக குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அசம்பாவிதம் எதுவும் நடக்காதவண்ணம் இருக்க போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டன.
இஸ்லாத்தை பற்றியும் நபிமார்கள் பற்றியும் அவதூறாக எழுதிய நபரை அடித்து உதைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில்,போலீசார் அவரை கூட்டி சென்றனர்.
இந்த சம்பவம் கடையநல்லூரில் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
புகைப்படங்கள்:அசன்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
- கடையநல்லூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி:என்ன படிக்கலாம்!எங்கு படிக்கலாம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


