கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட் (ரியாத்) பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி
31st August 2011 · 0 Comments
கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட் (ரியாத்)
பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி
கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட் சார்பில் இன்று காலை (28 .08 .2011 )பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பையில் 5 கிலோ அரிசி வீதம் 475 பைகள் கடையநல்லூரின் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்டத.
அல்லிமூப்பன் தெரு , ரகுமானியாபுரம் முதல் தெரு, மதீனா நகர், கம்புளி கிராமம் , கண்மணியாபுரம், பிர்தௌசியா நகர் ஆகிய இடங்களில் கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்டின் உறுப்பினர்கள் ,நிறுவனத் தலைவர் பீ. எம். கமால், செயலாளர் ஜனாப் வானத்தோடு ரஹ்மத்துல்லாஹ் ,மலுக்கன் கஸ்புல்லாஹ்
மௌலானா மௌலவி பீ. எம். முஹம்மது யூசுப் ஹழரத் (பிலால் பள்ளி பேஷ் இமாம்) நகர முஸ்லிம் லீக் முன்னாள் தலைவர் ஜனாப் இந்தி முஹம்மது காசீம் , ஒரட்டி முஹம்மது யூசுப்
தெங்க லப்பை ஜபருல்லாஹ், தெங்க லப்பை யூனுஸ் , கடையநல்லூர் நகரசபை துணைத் தலைவர் செல்லப்பா மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடையநல்லூரின் எல்லாத் தரப்பு மக்களாலும் கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்டின் இந்த சேவை வெகுவாகப் பாராட்டுப் பெற்றது.
இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்திட அவுச்சாரி ஜமால் ரியாத்தில் இருந்த படியே மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.உள்ளூரில் கே எம் டி யின் செயலாளர் வானத்தோடு
ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் மலுக்கன் கஸ்புல்லாஹ் அவர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூர் முஸ்லீம் டிரஸ்டின் 7 – வது பொது குழு கூட்டத்தின் சிறப்பு அழைப்பிதழ் நிகழ்ச்சி பற்றி ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள்
- கடையநல்லூரில் திடீர் சாலை மறியல் பரபரப்பு புகைப்படங்களுடன்!
- கடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


