கனடாவை வீழ்த்துமா ஜிம்பாப்வே
28th February 2011 · 0 Comments
உலக கோப்பை லீக் போட்டியில், இன்று கத்துக்குட்டி அணிகளாக கருதப்படும் ஜிம்பாப்வே, கனடா அணிகள் மோதுகின்றன.
சமீபகாலமாக எழுச்சி கண்டு வரும் ஜிம்பாப்வே அணி, முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 262 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது. ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியதால் 171 க்கு சுருண்டு, தோல்வியடைந்தது. இந்த தவறை இன்று கனடாவுக்கு எதிராக செய்யமாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
இதற்கேற்ப, கேப்டன் சிகும்புரா, அனுபவ தைபு, பிரண்டன் டெய்லர், ரே பிரைஸ் மற்றும் ஒருநாள் போட்டியில் 194* ரன்கள் எடுத்து அசத்திய சார்லஸ் கவன்ட்ரி ஆகியோர் அணியின் ஸ்கோரை <உயர்த்த வேண்டும். பவுலிங்கில் மபோபு, ரே பிரைஸ், உட்செயா, கிரீமர், சீன் வில்லியம்ஸ் போன்ற வீரர்கள் கனடா அணியை கட்டுப்படுத்துவது உறுதி.
கனடா நம்பிக்கை:
முதல் போட்டியில் 210 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தாலும், இன்றைய போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது கனடா. அணியின் கேப்டன் ஆஷிஸ் பகாய், ரிஸ்வான் சீமா, ஹர்விர் பெய்டுவான், பாலாஜி ராவ் ஆகிய இந்திய வம்சாவளி வீரர்கள் சாதிக்க முயற்சிக்கலாம். இதில் பாலாஜி ராவ், சாலஞ்சர் டிராபியில் தமிழக அணிக்காக கடந்த 2000ம் ஆண்டில் விளையாடியுள்ளார்.
தவிர, சீனியர் வீரர் டேவிசன் (40), ஹன்ஸ்ரா, குர்ரம் சோகன் போன்றவர்களும் அணியின் வெற்றிக்கு <உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானை வென்றது இந்தியா
- இளைஞர்களுக்கு வழிவிட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்
- சவூதி அரேபியத் தூதுவர் பங்களாதேசில் சுட்டுக்கொலை!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


