Filed Under:  கவிதைகள்

கருணைமிக்க மாந்தர்க்குயென் துஆக்கள்! – க.கா.செ.

21st February 2012   ·   0 Comments

கருணைமிக்க மாந்தர்க்குயென் துஆக்கள்!-க.கா.செ.

வரிவடி வெழுத்துகளெ லாமடிப்டை யினதாய
கரமெடுப் பதூஉம் – வாழுமுகை
வடிவின தாமதன் முழு முதற்பொரு ளொன்றையே
ஆதாரமாய்க் கொண்டியக்கப் படுகிறது!

அறிவுவடி வாகியாளும வனைநினை யிலாதவரோ
கற்றும் பயனிலார் – பயிற்றுவித்த
அசையாக் கல்வியா சானைப்போற்றிப் புகழ்வதே
கற்றும் பயனென்றெண் ணப்படுகிறது!

உள்ளமல ரில்லுள்ளிருக் குமாண்டவ னைக்குளிர்
விப்பவரோ வாழ்வார் – குறைவின்றி
உள்ளமன சாட்சிக்கும் கட்டுப்படு பவரோ
புகழோடு நிலைப்பரொ ளிரப்படுகிறது!

விருப்பு மற்றவனவ் வெறுப்புத்துறந் திங்குக்
கலப்பட மற்ற முதல்வன் – வெறுப்பு
விருப்பினை யளித்துமுளம் தளராமல் கருணையளிக்
குமிறைதுணை துன்பமிழக் கப்படுகிறது!

ஆடியுமாட்டு வித்தும கிழுமிறை யவனின்
புகழ்போற்றித் துதிப்பின் – இன்பமே
ஆழித்துன் பமிலாநற் கருமங்க ளிரைத்து
வாழவேவாழ் வியலென்றுண ரப்படுகிறது!

ஐம்புலன டக்கியாதொ ருவரிங் கு நல்வழி
செல்வாரோ பெறுபவர் – என்றுமே
ஐயமிலா இன்பம்! அஃதாவதே னையவரோ
பெறாரெனக் கொள்ளப் படுகிறது!

ஈடிணையிலா இறையடிபணி வதைத்தவிர மனத்
துயர்போக் கிடயியலா – அஃதாவது
ஈருலகின் துன்பம் தொடராமலி ருக்கயிணை
கற்பிக்கக் கூடாதென் றாளப்படுகிறது!

பிறவித்துன் பம்நீங்கா எக்கணமு மிறைநம்
பிக்கையுடை யோர்தவிர – அறநிலை
பிறளாக் கடவுளைத் தொழுதுங்கள் துன்பம்
போக்கிக் கொள்கவனவிளக் கப்படுகிறது!

இறையவன் அருளனைத்தும் நமக் களிக்க
இன்றுமென் றென்றுமே – போற்றி
கன்னி எழுத்துகளால் கணினியோடு அனைத்துலக
கருணைமிக்க மாந்தர்கக்குயென் துஆக்கள்!

இறைவா எங்கள் அனைவர்க்கும்
இறையச்சம் கொண்ட, நோய்நொடியற்ற
நிம்மதியான வாழ்வை வழங்கியருள்வாயாக!….

ஆக்கம்,
-க.கா.செ.
கடையநல்லூர்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.