Filed Under:  தமிழ் நாடு

கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய கணவன் இடையூறாக இருந்ததால் கொன்றோம்

30th July 2011   ·   0 Comments

உசிலம்பட்டி : கள்ளக்காதலனை 2ம் திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு. சென்ட்ரிங் கான்டிராக்டர். இவரது மனைவி செல்வி(35). இவருக்கு இதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கரிகாலன்(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்த 27ம் தேதி வீட்டில் வேலு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தன்னை கட்டிப் போட்டு கணவரை கொன்றுவிட்டு ரூ.5 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக செல்வி போலீசாரிடம் தெரிவித்தார்.

விசாரணையில் கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் உதவியுடன் செல்வியே கணவரை கொலை செய்தது தெரியவந்தது. உசிலம்பட்டி டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடினர். விசாரணையில் செல்வி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கரிகாலனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். அவரை 2ம் திருமணம் செய்து இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன் வேலு மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றோம்.

அவர் தப்பினார். இதையடுத்து கரிகாலன் மூலம் கூலிப்படையினருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து கணவரை கொல்ல முடிவு செய்தோம். இதற்காக அவர்களுக்கு ரூ.1.6 லட்சம் கொடுத்தோம்.  கரிகாலன், நண்பர் சரவணன், நாகராஜ், ஜெயக்கொடி, மாலுச்சாமி(19), சதீஷ்(19) ஆகியோர் வைத்து சதித்திட்டம் தீட்டினர். கடந்த 26ம் தேதி நள்ளிரவில் கரிகாலன் வீட்டுக்கு வந்தார்.

முதலில் வேலுவை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்ய முயன்றனர். கணவர் போராட தொடங்கியதால் நான் கால்களை பிடித்துக் கொள்ள, வேலுவின் கழுத்தை அவர்கள் அறுத்ததுடன், மார்பு, வயிறு பகுதிகளிலும் சரமாரியாக குத்தியதில் அவர் இறந்தார். இவ்வாறு வாக்குமூலம் அளித்தார் என்றனர்.

இவ்வழக்கில் செல்வி, கரிகாலன், அன்னம்பார்பட்டி சரவணன்(29), நாவார்பட்டி  சசிக்குமார், கருக்கட்டான்பட்டி நாகராஜ், மாலுச்சாமி மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பண்ணைப்பட்டி ஜெயக்கொடியை தேடிவருகின்றனர். கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டனர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.