Filed Under:  செய்திகள், தமிழ் நாடு, தேர்தல் ஸ்பெஷல்

குறிச்சிகுளம் ஊராட்சி மன்றத்தலைவர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மெகர்பானு

27th October 2011   ·   0 Comments

நெல்லை மாவட்டம் குறிச்சிகுளம் ஊராட்சி மன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி பிரமுகர் இ.மெகர்பானு 395 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து த.மு.மு.க., அ.தி.மு.க. ஆதர வுடன் போட்டியிட்ட மில்லத் இஸ்மாயில் சகோதரி ஆயிஷா பேகம் 193 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

குறிச்சிகுளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி யேற்ற இ.மெகர்பானுவுக்கு நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்ட வர்த் தக அணிச் செயலாளர் பாட்டபத்து எம்.முகம்மது அலி, நகர தலைவர் கே.எஸ்.அப்துல் ரகீம், நகர செயலாளர் மாதண்ணன், ஓய்வு பெற்ற தாசில்தார் காதர் அவுலியா, திப்பு சுல்தான், நகர் பிரைமரி செயலாளர் பக்கீர் மைதீன், மணிச்சுடர் நிருபர் புளி யங்குடி ஷாகுல் ஹமீது ஆகியோர் சால்வை அணி வித்து வாழ்த்துக் கூறினர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.