Filed Under:  தொழில்நுட்பம்

குழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்சிகளை சேமித்து வைக்க இலவச பிரத்யேக டைரி.

6th April 2011   ·   0 Comments

நம் வீட்டு சுட்டி குழந்தைகள் சிறு வயதில் செய்யும் அழகான
சேட்டைகளை ஆன்லைன் மூலம் சேமித்து வைக்க இலவச
டைரி அளிக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சிறுவயதில் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் ஆல்பம் வைத்து
சேமித்திருப்போம், ஆனால் இனி நம் குழந்தைகளின் புகைப்படங்களை
மட்டுமல்ல அவர்கள் சிறுவயதில் செய்யும் அத்தனை நிகழ்சிகளையும்
ஆன்லைன் டைரியில் இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி: http://www.keepaboo.com

இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு
உருவாக்கிக் கொண்டு நம் குழந்தைகள் சிறுவயதில் கடந்து வந்த
அனைத்து மகிழ்ச்சியான தருனங்களை அழகாக சேமித்து வைக்கலாம்.
புகைப்படம் மட்டுமல்லாமல் எந்த மாதம் எந்த வருடம் எந்த தேதியில்
இவர்கள் செய்த சுட்டித்தனம் என்ன என்பதை எழுத்துப்பூர்வமாகவும்
சேமிக்கலாம்.  கையில் வைத்திருக்கும் டைரி கூட ஒருனால் பழசாகி
போகலாம் ஆனால் ஆன்லைன் மூலம் சேமித்து வைத்திருப்பதால்
கால நிலைகள் கடந்து நம் குழந்தைகள் கடந்து வந்த பாதை சேமிக்கப்
பட்டிருக்கும். புதுமையை விரும்பும் அனைத்துப்பெற்றோர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Print Friendly

தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.