Filed Under:  வளைகுடா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!

31st January 2012   ·   0 Comments

பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ மற்றும்
அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.A., M.P., ஆகியோர் சிறப்புரை!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், பிப்ரவரி (2012) மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்…
தொடர்ந்து….
  • 2 சிறப்பு விருந்தினர்கள்!
  • 3 நாட்கள்!
  • 4 இடங்கள்!
  • சிறப்புப் சொற்பொழிவுகள்!
  • குவைத்தில் முதல் முறையாக இஸ்லாமிய பட்டிமன்றம்!
  • ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!
  • முஸ்லிம் அல்லாதோருக்கான சிறப்பு நிகழ்ச்சி!
  • குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துரைகள்!
  • குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின்  சிறப்புக் கருத்தரங்கம்!
  • பிற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துரைகள்!
  • பரிசளிப்பு நிகழ்ச்சி!
தகவல்: M.S ABDUL KUTHOUS HASANI B.A.
Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.