சீனா நிங்ஷியா மாகாணத்தில் மசூதி இடிப்பு பிரச்சினை முஸ்லிம்கள் போலீசார் பயங்கர மோதல்
4th January 2012 · 0 Comments
சீனா நிங்ஷியா மாகாணத்தில் மசூதி இடிப்பு பிரச்சினை முஸ்லிம்கள் போலீசார் பயங்கர மோதல்
சீனாவில் வடமேற்கு பகுதியில் நிங்ஷியா மாகாணத்தில் உள்ள தாஷான் என்ற கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் புதிதாக மசூதி ஒன்றை கட்டினார்கள். இது அனுமதியின்றி கட்டப்பட்டு இருப்பதாக கூறி அதிகாரிகள் இடிக்க முயன்றனர். இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கானோர் திரண்டு தடுக்க முயன்றதால் போலீசாருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கத்தி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வெடித்தனர். இந்த கலவரத்தில் 5 முதல் 10 பேர் உயிர் இழந்து விட்டதாக கிராமவாசிகள் கூறியதாக சீன பத்திரிகை தகவல் கூறுகிறது. பாதிக்கப்பட்ட கிராமத்துடன் தொலைத்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் பாதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை.
-க.கா.செ.
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
- ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆலோசகராக முஹம்மது ஜின்னா !
- ரஷ்ய விமான விபத்து-50 பேர் பலி!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


