தமிழகத்தில் ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்தி
31st October 2011 · 0 Comments
“தமிழகத்தில் ஒட்டுமொத்த அளவில், ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என, அரசு தொழில் துறை இணை செயலர் சண்முகம் பேசினார். “பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேம்படுத்த, வருங்காலத்தில் உள்ள சவால்களும், நிலைப்பாடுகளும்’ என்ற தலைப்பில், ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை, விவேகானந்தா கல்லூரியில் நடந்தது.
இதில், அரசு தொழில் துறை இணை செயலர் சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும், பொறியியல் உள்ளிட்ட துறையில் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெறுகின்றனர். ஆனால், குறைந்த அளவு ஊதியத்திலேயே பணியில் சேருகின்றனர். தமிழகம், மோட்டார் உட்பட எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்தில் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் தொழில் துவங்குகின்றன. தமிழகத்தில் ஒட்டுமொத்த அளவில், ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1 நிமிடத்திற்கு, மூன்று கார்கள் உற்பத்தியாகின்றன. 75 வினாடிக்கு ஒரு வர்த்தக வாகனம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் வருமானத்தில், தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. இவ்வாறு சண்முகம் பேசினார்.
தகவல் : நல்லூரான்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- Cookies என்றால் என்ன?
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
By Abu Aasima
Readers Comments (0)
Comments are closed.


