தமிழக தேர்தல் கமிஷன் ஒருதலை பட்சமான முடிவு
30th October 2011 · 0 Comments
உள்ளாட்சி தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தோர், 117 இடங்களில் வென்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்க்கக்கூடாது என்று, தாவூத் கொடுத்த புகாரின் பேரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வெற்றி பட்டியலில் சேர்க்க, தமிழக தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷனுக்கு முஸ்லிம் லீக் கட்சி கடிதம் எழுதியது. அதற்கு,”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில அளவில் பதிவு செய்யப்படவில்லை. அதை பதிவு செய்த பின்னர், பட்டியலில் சேர்ப்போம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்சி பெயரில் தேர்தலில் நிற்காததால், உங்களுக்கான அங்கீகாரம் காலாவதியாகிவிட்டது. எனவே உங்கள் வேட்பாளர்கள் சுயேச்சை பட்டியலில் உள்ளனர்’ என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன் பதிவு செய்யபட்ட கட்சிகளின் வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை வெளியிட்டிருந்தது .ஆனால் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அக்கட்சி நிலைபாடு கொண்டுள்ளது .எனவே தமிழக தேர்தல் கமிசன் ஆதரவாளர்கள் யாருமே இல்லாத தாவூத் என்பவரிடமிருந்து ஒரு மனுவை பெற்றுக்கொண்டு ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை வெளியிட தேர்தல் கமிசன் மறுத்துள்ளது ,நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
முஸ்லிம் சமுதாயம் அரசியல் ரீதியாக பலம் பெறுவதை இப்போதல்ல ,இந்தியா சுதந்திம் அடைந்த காலத்திலிருந்து சீர்குலைக்கும் வேலை தொடர்ந்து கொண்டுள்ளது .அதற்க்கு முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சிலர் துணை போவதும் காயிதே மில்லத் காலத்திலிருந்தே உள்ளது .
தகவல் : நல்லூரான்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்
By Abu Aasima
Readers Comments (0)
Comments are closed.


