தினமலர் ஆசிரியருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதில்
30th October 2011 · 0 Comments
அன்பார்ந்த் தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பில், `இந்திய யூனியன் முஸ்லிம் லீகை கைப்பற்றுவது யார்� என்ற தலைப்பில் விரிவான செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்கள் சமுதாயத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த விளக்கத்தை வெளியிட வேண்டுகிறோம்.
1948 மார்ச் 10 ல் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களால் துவக்கப்பட்டு, அவர்கள் மறைவிற்குப்பின் அப்துர் ரஹ்மான் பாபகி தங்ஙள்,இபுராஹிம் சுலைமான் சேட்,குலாம் மஹ்மூது பனாத்வாலா ஆகியோர் அகில இந்திய தலைவர்களாகவும், அப்துல் வகாப் ஜானி சாகிப்,ஆ.கா.அ.அப்துல் சமது ஆகியோர் தமிழக தலைவர்களாகவும் இருந்து வழி நடத்தி வந்துள்ளனர். அவர்களின் மறைவிற்குப்பின் மத்திய அமைச்சர் இ.அஹமது அகில இந்திய தலைவராகவும்,பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழக தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர். காயிதே மில்லத் காலம் தொட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்புக்கள் அந்தந்த மாநில அடைமொழிகளோடு அழைக்கப்பட்டு வந்தன.இதன்படி தமிழ்நாட்டில் “தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்�� என்றும், கேரளாவில், “கேரள ராச்சிய முஸ்லிம் லீக்�� என்றும் அழைக்கப்பட்டது. பதவிகளில் வாரிசு உரிமை என்பது இஸ்லாத்திலும் இல்லை; இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலும் இல்லை. ஆனால் `தாதா வாரிசு� என்று தாவூத் மியாகான் என்பவரும், `பாவா வாரிசு� என்று பாத்திமா முசப்பரும் பிரச்சனைகளை உருவாக்கி புகார்களை அனுப்பினர்.
உச்ச நீதிமன்றம் வரை தொடரப்பட்ட அனைத்து வழக்கின் தீர்ப்புகளும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு சாதகமாக வந்துள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் அனுப்பிய புகாரை தேர்தல் ஆணையம் அப்படியே எங்களுக்கு அனுப்பி அதற்கு விளக்கம் கேட்டது.ஆதாரங்களும் விளக்கங்களும் நாங்களே சமர்ப்பித்தோம் இந்தியாவில் இது ஒரு வழக்கமான நடைமுறை. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் , கேரளா மாநிலத்தில் கேரள ராச்சிய முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட கிளை அமைப்புக்கள் அனைத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைவது பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பிவிட்டன. தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரிலேயே உறுப்பினர் சேர்க்கப்பட்டு முறைப்படி கிளை மற்றும் மாவட்ட, மாநில கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் இறுதிக்குள் நடைபெற்று இவைகளுக்கான ஒப்புதல் அளித்ததும் தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். அதன்பின் எங்களைத்தவிர வேறு எவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரையோ பச்சிளம் பிறைக்கொடியையோ பயன்படுத்த முடியாது.
கேரளாவில் 20 எம்.எல்.ஏக்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 394 இடங்களில் தனி சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 115 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஒரு ஊராட்சியின் ஒரு உறுப்பினர் பதவிக்கு கூட போட்டியிட தகுதியற்ற- ஏன் தங்களை தவிர வேறு எவரும் உறுப்பினராக இல்லாத தாவூத் மியாகானையும்,பாத்திமா முசப்பரையும் இம்மாபெரும் இயக்கத்தோடு ஒப்பிடுவது நியாயமானதல்ல. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயக அமைப்பு. சட்டப்படி செயல்படக்கூடியது- மத்திய மாநில தேர்தல் ஆணையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை சுட்டிக் காட்டியே எங்கள் தேர்தல் வெற்றியை கட்சி பெயருடன் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு எங்களது தலைவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அப்போதெல்லாம் அது பிரச்சனையாக்கப்பட்டதில்லை. இனி தனி சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்து உள்ளாட்சி தேர்தலில் அதை நிரூபித்துள்ளோம். இதில் சர்ச்சைகளுக்கு இடமில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை இது தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை. தாவூத் மியாகான்,பாத்திமா முசப்பருக்கு தொண்டர்களும் இல்லை, கிளைகளும் இல்லை; ஊடகங்கள் மட்டுமே அவர்களை விளம்பரப்படுத்துகின்றன.
தயவு செய்து மேற்கண்ட விளக்கத்தை தினமலரில் வெளியிட அன்புடன் வேண்டுகிறோம். தங்கள் அன்புள்ள காயல் மகபூப் தமிழ்நாடு மாநில செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்புக்கு :97907 40787
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்
By Abu Aasima
Readers Comments (0)
Comments are closed.


