திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி
30th November 2011 · 0 Comments
அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்
திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
ரூ.43 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
இதுவரை ரூ.96 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன
திருப்பூர்,
திருப்பூரில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்ட நிவாரண உதவி யினை அனைத்து இஸ்லா மிய ஜமாஅத் கூட்ட மைப்பு சார்பில் வழங்கப் பட்டது.
திருப்பூரில் கடந்த 6-ம் தேதி நள்ளிரவில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள் ளப் பெருக்கால் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் பாதிக்கப்பட்ட னர்.
இவர்களுக்கு உதவிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 16 அமைப்பு களை கொண்ட அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், வீட்டு உப யோகப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதன்படி கடந்த 23-ம் தேதி 2500 குடும்பங் களுக்கு ரூ.53 லட்சம் மதிப் பிலான பொருட்கள் வழங் கப்பட்டது.
கூட்டமைப்பின் சார் பில் இரண்டாம் கட்ட மாக ரூ.43 லட்சம் மதிப்பி லான வீட்டு உபயோகத் திற்கு தேவையான ஸ்டவ் அடுப்பு, குடம், பாய், தலை யணை, பெட்ஷீட் உள் ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 29-11-11 (நேற்று) மாலை அல்-அமீன் நடு நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் முன்னணியினர்
இந் நிகழ்ச்சிக்கு கூட்ட மைப்பு நிர்வாகி அப்துல் மஜீத் தலைமை வகித்தார். மங்கலம் முஸ்தபா வர வேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் புறநகர் மாவட் டத் தலைவர் பி.எஸ். அம்சா ஹாஜியார், மாநகர் மாவட்டச் செயலாளர் என். சையத் முஸ்தபா, கோவை புறநகர் மாவட் டச் செயலாளர் ஹுசைன் ஹாஜியார், மேட்டுப் பாளையம் ஐக்கிய ஜமா அத் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பின ருமான முஹம் மது குட்டி ஹாஜியார், மேட்டுப் பாளையம் ஐக்கிய ஜமா அத் செயலாளரும், பிரை மரி தலைவருமான க்யூ. அக்பர் அலி, கோவை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகி கள், ஜமாஅத்துல் உலமா, லெப்பை சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கூட்ட மைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார் கள்.
இந் நிகழ்ச்சியில் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக் கான உதவிகளை கோவை, மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகி கள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினார் கள்.
கோவை ஐக்கிய ஜமா அத் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்க ளும், மேட்டுப் பாளையம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் ரூ.2 லட்சம் ஆகியவை களை கூட்டமைப்பு நிர் வாகி களிடம் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஜவஹர் அலி, ஜெய்னுல் ஆபிதீன், மகபூப் பாஷா, பாபு, அமானுல்லாசேட், ஹபீபுர் ரஹ்மான், சையத் இப்ராஹீம், அப்துல் வஹாப், மங்கலம் பிரைமரி தலைவர் ஜக்கரியா சேட், மேட்டுப்பாளையம் இளைஞர் அணி நிர்வாகி ஜாபர் சாதிக், மவ்லவி ஹாஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் முற்றி லும் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூ7 லட் சம் உதவி தொகையும், தேநீர் வியாபாரம் செய்யும் ஒருவருக்கு சைக்கிளுடன் தேநீர் விற்பனைக்hன பொருட்கள் ஆகியவையும் இந் நிகழ்ச்சியில் வழங்கப் பட்டது.
அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சிறு தொழில் நிறுவ னங்களுக்கு தொழிலுக்hன நிவாரண உதவியை எதிர் வரும் மாதத்தில் ஏற்பாடு செய்ய உள்ளதாக கூட்ட மைப்பு நிர்வாகிகள் தெரி வித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜவஹர் அலி நன்றி கூறினார்.
நன்றி, மணிச்சுடர்
-தகவல்
க.கா.செ.
கடையநல்லூர்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
Readers Comments (0)
Comments are closed.


