Filed Under:  வளைகுடா

துபாயில் மார்க்க‌ சொற்பொழிவு ம‌ற்றும் ஷ‌ரீஅத் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி

9th February 2012   ·   0 Comments

துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ சொற்பொழிவு ம‌ற்றும் ஷ‌ரீஅத் கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி 08.02.2012 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிள‌க்கில் ந‌டைபெற்றது.

துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வ‌ருகை புரிந்துள்ள‌ சென்னைப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ அர‌பி மொழித்துறை பேராசிரிய‌ர் முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌வி அவ‌ர்க‌ள் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்த்தினார்.

அத‌னைத் தொட‌ர்ந்து ஷ‌ரீஅத் தொட‌ர்பான‌ கேள்விக‌ளுக்கு விடைய‌ளித்தார். த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

நிக‌ழ்வினை முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்வில் ஸ்கை சீ இய‌க்குந‌ர் அல்ஹாஜ் செய்ய‌து அப்துல் காத‌ர், ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி, துணைப்பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, விழாக்குழு செய‌லாள‌ர் காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், ஊட‌க‌த்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், மூன் தொலைக்காட்சி ஆலோச‌க‌ர் காய‌ல் சுலைமான் லெப்பை ஆலிம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற்ன‌ர்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

தகவல்:முதுவை ஹிதாயத்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.