தெ.ஆபிரிக்காவை வீழ்த்தி திரில்லிங் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா : ஒருநாள் போட்டியாக மாறிய டெஸ்ட் போட்டி
22nd November 2011 · 0 Comments

தெ.ஆபிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில், ஜோஹன்ஸ்பார்க்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் தெ.ஆபிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 339 ஓட்டங்களையும் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாண்டிங் (62), கவஜா (65) சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆஸ்திரேலியாவை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். எனினும் அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் போட்டி திசை மாறியது.
ஒரு கட்டத்தில் 215 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ஆனால் இறுதியில் களமிறங்கிய ஹாடின் அரைச்சதம் அடித்தார். ஜான்சன், ஆட்டமிழக்காது 47 பந்துகளில் 40 ஓட்டங்களை குவித்தார். இறுதியில் 2 விக்கெட்டுக்களே மீதமிருந்த நிலையில் 310 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலிய அணி.
போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைவதற்கு 3 ஓவர்களே மீதமிருந்த நிலையில் ஆஸ்திரேலியா இந்த திரில்லிங் வெற்றி பெற்றது. இது தெ.ஆபிரிக்க ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானை வென்றது இந்தியா
- இளைஞர்களுக்கு வழிவிட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்
- சவூதி அரேபியத் தூதுவர் பங்களாதேசில் சுட்டுக்கொலை!
By P.S.Md Ali
Readers Comments (0)
Comments are closed.


