தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம்:மு.க.ஸ்டாலின்
31st October 2011 · 0 Comments
வேலூரில் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
1967-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றிபெற்றது. அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லு படியாகும் என்று சட்டசபையில் முதல் தீர்மானம் கொண்டு வந்தார். தற்போது சீர்திருத்த திருமணங்கள் நடப்பதை எளிதாகத் தான் காணமுடிகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பல நலதிட்டங்களை கொண்டு வந்தார். அப்படிபட்ட திட்டங்களுக்கு என்ன பரிசு கிடைத்தது? சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தோம். அப்படிபட்ட தோல்வியை கண்டு துவண்டுவிடவில்லை.
இந்த ஆட்சி மாற்றத்தால் மக்கள் வேதனை படுகிறார்கள். தோல்விக்கான காரணம் குறித்து நாங்கள் அடிக்கடி ஆலோசித்தோம். அப்போது ஒன்றை உணரமுடிந்தது கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை உணர முடிந்தது. அதன் காரணமாக கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் எங்கே என்று மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள்.
உயர் சிகிச்சை, கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் உள்பட எத்தனையோ திட்டங்கள் சாதனைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பொய் வழக்குகளையும் தாண்டி தி.மு.க. 30 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வரும் காலம் நம்முடையது என்பது அடையாளமாக தெரிகிறது. வெற்றி தோல்வியை சமமாக கருதி உண்மையாக உழைப்பவன் தான் தி.மு.க. தொண்டன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் : நல்லூரான்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By Abu Aasima
Readers Comments (0)
Comments are closed.


