நமதூர் திரும்புவோம்-சே. அ. அப்துல் அஜீஸ்
21st February 2012 · 0 Comments
நமதூர் திரும்புவோம்
என்னை பெற்றவள் ‘நம்பிக்கை’யுடன்
அவள் கைகளை பிரித்து
உலவவிட்ட முதல் உலகெனும் எனதூர்.
என் கன்னங்களை கிள்ளி,
தலை முடிகளை கோதியும் என்னை வளர்த்த அழகிய விரல்களுடைய
உறவுகள் நிரைந்த பொன்னூர்.
என் இறைவனை வணங்க
முழு மனதுடன் முதலில்
முன்னேற்றி பதித்த ‘நல்லூர்’.
ஒற்றுமையால் மனித சங்கிலியை போல் தோன்றும் தெருக்களும்,
மாற்றார்களால் புரிந்து கொள்ள முடியாத மழலை சொற்களும்
தோன்றும் பேரூர்.
கடல் அலைகளால் நனையாவிட்டாலும்,
மலைச் சாரல்களால் நனையும் செம்பூர்.
எனதூர் வயல் வெளிகளையும், இயற்க்கையையும், அருவியின் சாரல்கள் முகங்களை படர்ந்து இருந்தாலும்,
இமை மூடாமல் ரசித்த இளைய ரசிகன் நான்.
குற்றால அருவியில் நனைந்த ஆடைகள் உலராமல்
வீடு வந்த நாட்களும் உண்டு.
கல்லூரி எனும் நிலைமையிலும் கூட
என் மண்ணை தாண்ட கண் கலங்கியவன்.
அதிக தூரங்கள் கடந்து இங்கு கலக்கத்துடன் வாழ்கிறேன்.
என் கண்களை துடைத்து இங்கு பார்த்தால், பல கலங்கிய எனதூர் கண்களையும் பார்க்கிறேன்.
இனி வரும் எனது பாதைகளை எங்கோ தொடர்ந்து பதிக்க எனக்கு மனமில்லை.
வளர்ந்து வரும் எனதூரில்
எனது பங்கை பதிக்கும் முயற்சியில் ஒன்றுதான் நான் இங்கு இருப்பது.
எனது எண்ணத்தை போலவே எண்ணங்கள் கொண்ட பலர்
புதிய வேகத்துடனும், கனவை நிறைவேற்றும் சக்தியுடனும்
பிறந்த மண்ணிற்கு திரும்புவதால் ‘இந்த உலகில் மறுபடியும் பிறப்பார்’.
வாருங்கள் நமதூர் திரும்புவோம்…
சே. அ. அப்துல் அஜீஸ்
தபுக்
சவூதி அரேபியா.
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரின் எழில்மிகு ஊராணி!-செங்கோட்டையன்
- பெற்ற தாயை போற்றுவோம்-சேயன் இப்ராஹீம் அபுதாபி
- தாரு சுத்தி பாவோடும் ராட்டு போனதெங்கே…-செங்கோட்டையன்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


